பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா, ஏலத்தில் எடுக்க முயன்ற வீரர் ஒருவரை சென்னை அணி ஸ்கெட்ச் போட்டு தூக்கியுள்ளது. csk signs daryl mitchell
துபாய் கோகோ கோலா அரங்கத்தில் நேற்று (டிசம்பர் 19) ஐபிஎல் அணிகளுக்கான மின் ஏலம் நடைபெற்றது. முதல்முறையாக ஏலத்தை பெண் ஒருவர் (மல்லிகா சாகர்) நடத்தினார்.
இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணி ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், ஷர்துல் தாகூர் என தரமான ஆல்ரவுண்டர்களை எடுத்துள்ளது.
இதில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் முறை வந்தபோது அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையே கடும் மோதல் நடந்தது.
ஏலம் ஒரு கட்டத்தில் 11 கோடியையும் தாண்டி சென்றது. இதனால் டெல்லி பின்வாங்க பிரீத்தி ஜிந்தா தங்களது அணியின் சார்பாக 11.75 கோடிக்கு அவரை ஏலம் கேட்டார்.
வேறு எந்த அணியும் கேட்கவில்லை. இதனால் டேரில் நம் அணிக்குத்தான் என சில நொடிகள் பிரீத்தி புன்னகை பூக்க, சென்னை அணியும் அவருக்காக களத்தில் இறங்கியதை மல்லிகா அறிவித்தார்.
CSK's Mass Entry at 12 Cr for Daryl🔥 pic.twitter.com/lBmjR3vN1X
— Bruce Wayne (@BruceWayne_MSD) December 19, 2023
இதனால் ஷாக் ஆன பிரீத்தி அப்படியே திரும்பி சென்னை டேபிளை பார்க்க, அமைதியாக அமர்ந்திருந்த சுந்தர் ராமன் சிரிப்பது போல செம ரியாக்ஷன் ஒன்று கொடுத்தார்.
கடைசியில் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு வீரர்களை எடுத்து ஷாக் கொடுக்கும் ஜிந்தாவுக்கே, சென்னை விபூதி அடித்து விட்டதே என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
Video: ஏலத்திற்கு பின் செம என்ஜாய்… இளம் கேப்டனுடன் ‘கூலாக’ விளையாடிய தோனி
கடும் போராட்டம்: ரூபாய் 8.4 கோடிக்கு தட்டித்தூக்கிய சென்னை… யாருப்பா இந்த 20 வயசு பையன்?
பொன்முடி தீர்ப்பு: முதலமைச்சர் ரியாக்ஷன் என்ன?
csk signs daryl mitchell