CSK bought for Rs. 14 crore that unsold player
|

அன்று விலை போகாத வீரர்… இன்று ரூ.14 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே! : யார் அவர்?

நியூசிலாந்து அணியை சேர்ந்த மற்றொரு ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 14 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஐபிஎல் 2024 போட்டிக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் ஏற்கெனவே நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கும்,  இந்திய அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கும் வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த நிலையில், தற்போது கடந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக சதம் (130 ரன்கள்) அடித்து அசத்திய மற்றொரு நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செலை 4 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே.

ரூ.1 கோடி அடிப்படை விலையுடன் ஏலத்திற்கு வந்த டேரிலை எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் போட்டியிட்டன. டெல்லி ஆரம்பத்திலேயே விலக,  கடைசி வரை போராடிய பஞ்சாப் நிர்வாகமும் விலையை ஏற்றியதுடன் கடைசி நேரத்தில் விலகியது.

இதனால் ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சிஎஸ்கே. இதன்மூலம் சென்னை அணியில் நியூசிலாந்து நாட்டின் வீரர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத மிட்செலை, தற்போது இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது சென்னை ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து தற்போது சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பகிரப்பட்டு வருகிறது.

அவற்றில் சில

https://twitter.com/Pratyush_Raj_/status/1737038505732370472

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஆல்ரவுண்டர்களை குறிவைத்து தூக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

குற்றவாளி என தீர்ப்பு: காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றுகிறாரா அமைச்சர் பொன்முடி?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts