ஆப்கானிஸ்தான் வீரர்கள் 3 பேருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. Afghanistan players doubtful for ipl 2024
ஐபிஎல் தொடரில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் பணம், புகழ், செல்வாக்கு ஆகியவை காரணமாக வருடாவருடம் ஐபிஎல் தொடர் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
இதனால் ஐபிஎல் கோப்பையை வென்றிட, ஒவ்வொரு அணியுமே வீரர்களை அதிக பணம் கொடுத்து எடுப்பது உட்பட பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.
அந்த வகையில் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு இந்த தொடர் ஒரு மிகப்பெரிய வெளிச்சத்தை அளித்துள்ளது.
ரஷீத் கான் தொடங்கி பல்வேறு வீரர்களும் ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடை விதித்து இருக்கிறது.
இதுகுறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் முரீத் ஆகிய மூவரும் ஆப்கானிஸ்தானுக்கான கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஜனவரி 2024 தொடங்கி ஓராண்டுக்கு தேசிய ஒப்பந்தத்திற்கான தகுதியை இழக்கின்றனர். அதோடு 2 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாட தடையில்லா சான்றிதழ் (N O C) பெற முடியாது,” என தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து 2 தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் வெளிநாடுகளில் நடக்கும் ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் மூவரும் ஆட முடியாத சூழ்நிலை தற்போது உருவாகி இருக்கிறது.
இதில் விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டு பின்னர் உலகக்கோப்பை தொடரில் சமாதானம் அடைந்த, நவீன் உல் ஹக் முரீத் லக்னோ அணிக்காக ஆடி வருகிறார்.
ஃபசல் ஹக் ஃபரூக்கி ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். முஜீப் உர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற மினி ஏலத்தில் ரூபாய் 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தற்போது இவர்கள் மூவருக்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அந்த அணிகள் மாற்று வீரர்களை தேடுமா? இல்லை அதற்குள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மேற்கண்ட மூவரும் சமாதானமாக செல்வார்களா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
இந்த 2 பேர் ஏன்? RCB-யின் தந்திரம் இதுதான்! ‘பிளேயிங் 11’ என்ன?
2023 ஒரு பார்வை : மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் முதல் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் வரை – என்ன நடந்தது?
Afghanistan players doubtful for ipl 2024