சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் பற்றிய கிண்டலும், கேலியும் தான் நிறைந்து வருகிறது. அந்த நடனம் குறித்த மீம்ஸ்கள் இணையதளத்தில் எங்கு பார்த்தாலும் உலவி வருகிறது. எந்த பிரச்னை என்றாலும் துணிச்சலாக கருத்து சொல்லும் நடிகை ஸ்ரீபிரியா, ஐஸ்வர்யா தனுஷின் நடனம் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில்’ நடனத்தில் அனுபவம் மிக்கவர்களுக்கு ஏன் மரியாதையும் வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். செல்வாக்கு உள்ளவர்களாக இருக்கவேண்டும் அல்லது பெரிய அளவில் சிபாரிசு தேவைப்படுகிறது. தொலஞ்சிப்போங்கடா.. என்று டுவீட் செய்துள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், இதை ரஜினியிடம் சொல்லலாமே என்று கேட்டதற்கு, ரஜினியிடம் ஏன் சொல்லவேண்டும், அரசு தான் இதனை சரி செய்ய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.
