ரெண்டு நாளைக்கு முன்னால, ‘நீங்க சோதனையிடுங்க.. நான் குளிக்க போறேன்’னு துரைமுருகன் சொன்னாரே.. அதுக்கு உடனே துரை ராக்ஸ், துரைமுருகன் ஆர்மின்னு நிறைய பேர் இறங்குனாங்க. இன்னைக்கு மூட்டை மூட்டையா பணம் சிக்கிருச்சுன்னு நியூஸ் வந்த உடனே ஆர்மி ஒண்ணையும் காணோம். உடனே ட்விட்டர் ஐடி பேரை மாத்திட்டு ஓடிட்டாங்க. இந்த களேபரத்துல நண்பர் ஒருத்தர் கேள்வி எழுப்பியிருக்கார்.. எட்டு வருசமா ஆட்சியில இல்லாதவங்ககிட்டயே இவ்வளவு இருக்குன்னா எட்டு வருசமா தொடர்ந்து ஆட்சியில இருக்குறவங்ககிட்ட எவ்வளவு இருக்கும்னு கேட்குறாரு. கேள்வி நல்லா தான் இருக்கு. ஆனா எலெக்ஷன் முடியுற வரைக்கும் இந்த ஒரு மேட்டரை வச்சு பேசியே திருப்தியாயிடுவாங்க… அப்புறம் தேர்தல் பிரச்சாரம் பண்ணுறாங்களே அதுலாம் இந்த ஏப்ரல் ஃபூல்ல வராதா அப்படின்னு கேட்குறாங்க.. அப்டேட்டை பாருங்க விளக்கம் கொடுத்துட்டு வாரேன்.
**@manipmp**
நாலு பேர் காபி குடிக்கணும்னா
பால்ல எவ்வளவு தண்ணி ஊத்தினாலும் தப்பேயில்ல
**@Kozhiyaar**
என் எல்லைக்குள் நான் இருந்து கொள்கிறேன்!!
ஆனால் இது தான் என் எல்லை என்று நீங்கள் வரையறுக்க கூடாது!!
**@drkvm**
22 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…
அதுவும் தேர்தல் சமயத்தில்..
# எடப்பாடிடா…
மோடிடா….
” கெத்து ” டா….!!
**@mohanramko**
தினமும் ஒழுங்கா படிக்க போறதுக்கே, ‘சீட்டை கிழிச்சி கையில கொடுக்கிறார்’ நடத்துனர்
**@amuduarattai**
பற்கள் முளைக்காத வரை, ஆர்வமாக பல் விளக்கும் குழந்தைகள், எல்லா பற்களும் முளைத்தவுடன், பல் விளக்குவதையே விட்டுவிடுகிறது.
**@Kozhiyaar**
அப்பா உங்களை யாராவது ஏப்ரல் ஃபூல் பண்ணியிருக்காங்களா!?
ஹும், அது ஆச்சுப்பா பதினோரு வருஷம்!!
(என்ன கிச்சன்ல சத்தம் வருது!?)
**@ShivaP_Offl**
கணவன்- எப்படி இந்த அளவுக்கு காரமாகவும்,கேவலமாகவும் குழம்பு வைக்கிற??
மனைவி- கிச்சன்ல எப்போதும் உங்க ஞாபகமாத்தான் இருக்கிறேன் மாமா,,,
**@krishnaskyblue**
சீமானின் பேச்சைக் கேட்டு கண் அயர்ந்த சேலம் வேட்பாளர்
//பாவத்தை வேட்பாளருக்கு சின்ன வயசுல இருந்து கதை கேட்டா உடனே தூங்கர பழக்கம் இருக்கும் போல
**@krishnaskyblue**
தூத்துக்குடியில் புல்லட் ட்ரெயின் விடப்படும் ~தமிழிசை
//காலையில 10 மணிக்கு தூத்துக்குடில புல்லட் ட்ரெயின் ஏறி அப்படியே மதுரை எய்ம்ஸ்ல வைத்தியம் பார்த்துட்டு திரும்ப 11 மணிக்குலாம் வீட்டுக்கு வந்துராலாம்
**@saravananucfc**
ஒரு விரல் புரட்சி ஓட்டு போடுவது, ஒவ்வொரு விரலின் புரட்சி உழைப்பது.
**@iam_Saranallu**
பேசிட்டு இருக்கும் போது சொல்லிக்காம எழுந்து போறவங்களுக்கு நம்ம “மைன்ட்வாய்ஸ்” கேட்டிருக்குமோ
என்னவோ!
**@kathir_twits**
டூர் போறோம்னு சொல்வதை விட, நிறைய போட்டோ எடுக்க போறோம்னு சொல்வதே சரி !!
**@saravananucfc**
தொண்டன்: தலைவரே இளைஞர்களின் எதிர்காலத்துக்கு என்ன செய்ய போறிங்க.
தலைவன்: அதான் முதியோர் பென்சன் இருக்குல்ல
**@Annaiinpillai**
இட்லிக்கு சட்னி போல் இருந்த கணவன் மனைவி உறவுகள் பீட்சாவுக்கு கெட்சப்பாக மாற ஆசைப்பட்டதே குடும்பத்தில் ஏற்படும் சண்டைகளுக்கான காரணம் ஆகும்!
#ஆடம்பரம்
**@iamkarthikeyank**
ஸ்மார்ட் போன்ஸ் ஒருவகைல
சிட்டி ரோபோ தான்..
அது எத்தனை “பாயின்ட் ஓ”வா இருந்தாலும்
பேட்டரி லோ.. லோ..
**@reddevil2o**
டுவிட்டர்ல ஒரு நிமிடத்தில் ஆயிரம் RT போறதை நம்பி கட்சி ஆரம்பிச்சா இந்த ஏமாற்றம்தான் மிஞ்சும்
களம் வேற தளம் வேற ஆண்டவரே..
**@Annaiinpillai**
கேள்வி கேட்பது ஈசி பதில் சொல்வது கஷ்டம் என்பதை உணர்ந்து விடுகிறார்கள் குழந்தையிடம் சிக்கிய அம்மாக்கள்!
**@smhrkalifa**
மோடி இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்,அவர்களின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க இருக்கிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம்.
-லாக் ஆஃப்
�,”