எலெக்‌ஷன் முடிஞ்சுருச்சு இன்னும் ஊர் வரலை: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

நேத்து நைட்டு அவ்ளோ கூட்டம் முண்டி அடிச்சு இடம் கிடைக்காம புட்போடுல தொங்கிட்டு போன கூட்டத்தை ஃபேஸ்புக்குல பார்க்கும் போது அடடே இவ்ளோ பேரு ஜனநாயகக் கடமையை ஆற்றப் போறாங்களான்னு நினைச்சேன். 100 சதவீதம் வாக்களிச்சு சாதனை பண்ணிருவாங்களோன்னு பயந்துட்டேன். இப்ப வாக்களிச்சவங்க சதவீதம் பார்த்தா ரொம்ப கம்மியா இருக்கு. விசாரிச்சுப் பார்த்தா அம்புட்டு பேரும் போய் ஓட்டு போட்டா நாடு உருப்புட்டுடும் அதான் நீ மெதுவா போன்னு டிரைவர்ட்ட சொல்லிருக்காங்களாம். நேத்து கிளம்புன வண்டி இன்னும் வந்து சேரலைன்னு போன் பண்ணுறாங்க. எப்படியோ ஊருக்கு போனவங்க நாலு நாள் என்ஜாய் பண்ணிட்டு வருவாங்க. நாளையில இருந்து நம்ம ஆளுங்க கட்சியை விட்டுட்டு சினிமா பக்கம் வந்துடுவாங்க.. நீங்க அப்டேட்டை பாருங்க.

**@Panneer Perumal**

அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது சொந்தக் காசைப் போட்டு படிக்கட்டில் தொங்கிக் கொண்டு ஊருக்கு போறேவன் கண்டிப்பா அவர்களுக்கு ஓட்டு போட மாட்டான் என்று

அதனால்தான் அடித்து விரட்டுகிறார்கள்

**@Ka Vikram**

இனி ஆட்சிக்கு வரும் கட்சியாவது பத்திரிகையாளர்கள் ஓட்டு போடுற மாதிரி வழிவகை செய்யுங்கய்யா அவங்க பாவம்

**@Hariharasuthan Thangavelu**

எங்க தொகுதியில பவர் ஸ்டாரும் ஒரு வேட்பாளர்…

அவருக்கு ஓட்டுப் போடறேன்னு ஒருத்தன் Power பட்டனை அமுத்தி மெசினை ஆப் பண்ணிட்டான்..

ரைட்றா… நடத்துங்க..

**@rdsaravanaperum**

ரயில் பயணத்தில்…

மிகக் கனத்த உருவம் கொண்ட இஸ்லாமியர் ஒருவர் முழங்கால் வலி என எதிர்சீட்டில் கால் நீட்டுகிறார். எதிரில் இந்து நண்பர் ஒருவர் அமர்கிறார். அதைப் பார்த்து காலை எடுக்கிறார் இஸ்லாமிய நண்பர்.

பரவாயில்ல பாய் என்கிறார் நண்பர்.

தமிழ்நாடு இப்படியே இருக்கட்டும்

**@Kozhiyaar**

தீம் பார்க் விளம்பரங்களை தொலைக்காட்சியில் பாரத்தால் ஓரே குடும்பம் மட்டும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருப்பது போல இருக்கும்!

அதை நம்பி அங்க போனீங்க,

அவ்ளோ தான்!!!

**@Kozhiyaar**

இன்றைய தேதியில் அம்மா வீட்டுக்கு செல்வது பெண்களை விட ஆண்களுக்கே அதிக மன நிம்மதியை தருகிறது!!!

**@kathir_twits**

மூனு நாள் டாஸ்மாக் லீவு விட்டுட்டு ஓட்டுக்கு 250 ரூபாய் கொடுத்து ஓடாத சரக்கை பிளாக்ல அதிக விலைக்கு வாங்க வைக்கும் ராஜதந்திரம் வேற லெவல் அரசியல் !!

**@shivaas_twitz**

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்

அவன் யாருக்காகக் கொடுத்தான்?

ஒருத்தருக்கா கொடுத்தான்

இல்லை ஊருக்கே கொடுத்தான்

**@shivaas_twitz**

நாளைல இருந்து ரசிக சண்டையை ஆரம்பிச்சிடுவாய்ங்களே

**@iamkarki**

வோட்டு போட வெளிநாட்டுல இருந்து வந்தேன்னு சீன் போடாதிங்கடா. இந்தா இருக்கிற திண்டிவனத்துக்கு போய் ஓட்டு போடுறத அத விட கஷ்டமாக்கி வச்சிருக்கோம்

**@shivaas_twitz**

கோபாலபுரம் பள்ளி கலைஞரையும், ஸ்டெல்லா மேரி கல்லூரி ஜெயலலிதாவையும் தேடுகின்றன..!

**@BoopatyMurugesh**

பொங்கலுக்கு ஏன் சிறப்பு பஸ் விட்டிங்க?

– ஓட்டு போடுவானுங்கன்னு நெனச்சு விட்டேன்..

தேர்தலுக்கு ஏன் சிறப்பு பஸ் விடல?

– ஓட்டு போட மாட்டானுங்கன்னு தெரிஞ்சுருச்சு நிறுத்திட்டேன்..

**@shivaas_twitz**

சன் டிவியில இன்னைக்கு விடுமுறை தின சிறப்பு திரைப்படங்களாம்…

சிறப்பு.

**@Piramachari**

இங்க விஜய்யும் திரிஷாவும்

வந்ததை பார்த்துட்டு இருங்க!!!

எவனாச்சும் தீபாம்மா வந்துச்சானு கேட்டீங்களாடா???

**@Textrovert_sk**

நம்ம பேர்ல வேற எவனோ Vote பண்ணியிருப்பான்.. 49P ஃபைல் செஞ்சு ஒருவிரல் புரட்சி பண்ணலாம்னு நிறைய கனவோட Boothக்குள்ள நுழைஞ்சா என் பேரை சத்தமா சொல்லி ஓட்டு போட வெச்சிட்டாங்க..

**@udaya_Jisnu**

கொலப்பசிக்கு மேகி,

அதும் நம்ம கையாலயே செஞ்சு திங்கிறதெல்லாம், அந்நியன் படத்துல காட்டாத கருடபுராணம்…

**@shivaas_twitz**

வாக்குப்பதிவு முடிஞ்ச கையோட 8 வழி சாலைக்கு அப்பீல் போவாங்கல்ல..?!

**@Annaiinpillai**

குழந்தைகளுக்கு குட் டச் …பேட் டச் முக்கியம் என்பதை விட …செல்போனை டச் பண்ண விடாமல் இருப்பதே மிக முக்கியம் ஆகும்!

**@smhrkalifa**

டெல்லியில் பாஜக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக எம்பி மீது காலனி வீச்சு.

//அரசே இது கெட்ட சகுனம்

**@Annaiinpillai**

முழுக்க நினைந்தப் பிறகு முக்காடு எதற்கு என்பது தவறு செய்பவர்கள் தவறு செய்வதற்காக மனதில் ஏற்றுக் கொண்ட வேதவாக்கு!

**@Annaiinpillai**

இன்று நம் கடமையை ஆற்றியது நமக்கு தெரிந்தால் போதும் ஊருக்கே தெரிய வேண்டிய அவசியம் இல்லை ஸ்டேடஸ்ல வச்சி சாவடிக்காதிங்க மக்களே!

**@Kuppuswamy Ganesan**

வாக்களித்து விட்டு வரும்போது தெருமுனையில் மூடியிருந்த ரேஷன் கடை வாசற்படியில் ஐந்தாறு சின்னப்பையன்கள் உட்கார்ந்து உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் பனிரெண்டிலிருந்து பதினைந்து வயதிருக்கும்.

“நாமல்லாம் ஓட்டு போடறப்போ ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் குடுப்பாங்கடா” என்றான் அந்த நைகி பனியன் அணிந்தவன்.

“இல்லடா அதெல்லாம் இப்பவே தர்ராங்களாம், விக்கி சொன்னான். நமக்கெல்லாம் அப்போ பத்தாயிரம் கிடைக்கும்டா” என்றான் அவெஞ்சர்ஸ் டிஷர்ட் அணிந்திருந்தவன்.

இளைய பாரதத்தினாய் வா வா வா…

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share