மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசியதாவது: “உலகளவில் எய்ட்ஸை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு அளப்பறியதாக இருக்கிறது. எய்ட்ஸ் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெட்ரோ வைரல் மருந்துகளில் 80 சதவிகிதம் இந்திய மருந்து நிறுவனங்களாலேயே விநியோகிக்கப்படுகின்றன. வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் அதிக விலை கொண்டவையாக இருப்பதால் வளரும் நாடுகள் இந்திய மருந்துகளையே வாங்குகின்றன. எய்ட்ஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டில் 66 சதவிகிதமாக இருந்தது. இது, 2007ம் ஆண்டில் 55 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. தற்போது, எச்ஐவி சிகிச்சையை நம்பி லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குப் போதுமான அளவு மருந்தை உற்பத்தி செய்யவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது” என்றார்.
எய்ட்ஸ் மருந்துகள்: 80 சதவிகிதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
