கடந்த 2001ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படம் மூலம் நடிகையானவர் சோனா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.actor sona protest in pepsi office
தற்போது, தன் வாழ்க்கையை ஸ்மோக் என்கிற பெயரில் வெப்தொடராக சோனா எடுத்துள்ளார். அதற்கான ஷூட்டிங் முடிந்து ப்ரொமோஷன் வேலை தொடங்கும் நேரத்தில் ஹார்டு டிஸ்க்கை எடுத்துக் கொண்டதாக கூறி பெப்சி அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 24 ) சோனா தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசியுள்ள சோனா, “ இந்த துறைல 25 வருஷமா இருக்கேன். படம் தயாரிக்கிறேன். ஆனா 10 வருஷம் பாத்தீங்கன்னா என்னை வேலை செய்ய யாரும் விட மாட்டேங்கிறாங்க.actor sona protest in pepsi office
ஒரே டைம் வாய திறந்து, என் மேல ஒருத்தன் கைய வைச்சிட்டான் என்று ஓபனா சொல்லிட்டேன். அதுக்கு ஒதுக்கிட்டாங்க. இப்படித்தான் நடக்கும் என தெரியும். அதனால நானே ஒதுங்கிவிட்டேன். நான் ஒரு படத்தை இயக்கி, ஓடிடியில் ஒப்பந்தம் போட்டேன். பூஜை போட்ட நாளில் இருந்து பிரச்சினையாகவே வந்துட்டு இருக்குது.
டெக்னிசியன்களிடம் சம்பளம் கொடுத்ததாக கூறி வவுச்சரில் கையழுத்து வாங்கிருக்காங்க. ஆனால், பணத்தை அவர்கள்கிட்ட கொடுக்காம அந்த மேலாளர் ஏமாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 8 லட்சம் ஏமாத்திருக்காரு. இதை, அந்த டெக்னிசியனே என்னிடத்தில் கூறி சம்பளம் கேட்டார்.
ஒரு மேனேஜர் வேலையில் வைத்திருந்தோம். காசை வாங்கி ஏமாற்றிவிட்டார். என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் கேமரா யூனிட்டிடம் கொடுத்துவிட்டார். இது தொடர்பாக பெப்சி அமைப்பிடம் புகார் கொடுத்தேன். ஆனால், பெப்சி என் பக்கமே அந்த பிரச்னையை திருப்புகின்றனர்.actor sona protest in pepsi office
அவருக்கு காசு தர வேண்டும் என்று கூறுகின்றனர். என்னுடைய ஒரு ஹார்ட் டிஸ்கை வாங்கி கொண்டு தர மறுக்கின்றனர். அந்த ஹார்டு டிஸ்க்கை வச்சிருக்கிறவன் நைட்டு போன் செய்து நக்கலா பேசுறான். இரவு 1 மணிக்கு எல்லாம் போன் போட்டு மிரட்டுகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பெப்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்துவேன் ‘ என்று தெரிவித்துள்ளார்.