என்னது மோடி குடியரசுத் தலைவர் ஆய்ட்டாரா?-அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

ஐ.நாவில நம்ம மோடி ஐயா தமிழ்ல புகுந்து விளையாடினத பாத்து அப்டியே புல்லரிச்சிருச்சு போயிருச்சு. நாமளும் போய் தமிழ வளத்திட்டு வரலாம்னு, ஒரு செய்யுள்ள கண்டுபுடிச்சு டிவிட்டர் கிளிய தொறந்தா அப்டியே ஷாக் ஆயிட்டேன். என்னது இனி டிஎன்பிஎஸ்சில தமிழ் இல்லையா!! நானே எப்படியாச்சும் கவர்ன்மெண்ட் வேலய வாங்கிட்டுத் தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு ஒரு வைராக்கியத்தில இருக்கேன். அதுக்குள்ள இப்புடி தமிழயே தூக்கிட்டாங்க. அந்த சோகத்தில டிவிய தொறந்தா நம்ம இம்ரான்கான் சாரு, பிரசிடண்ட் மோடின்னு சொல்லி ஒரு குண்ட தூக்கி போடுறாரு. நடுக்கத்தில எனக்கு காய்ச்சலே வந்திருச்சுங்க. நீட் பிரச்சினைய பாத்தா ஆஸ்பத்திரி பக்கமா போறதுக்கே பயப்புடுற நிலைமை வந்துரும் போல. நான் போய் எதுக்கும் என் பாட்டி சொன்ன வைத்தியத்தை எல்லாம் ரெக்கார்டு பண்ணிட்டு வர்றேன். நீங்க போய் அப்டேட்ட படிங்க.

**கலா**

ADVERTISEMENT

எல்லோரும் ஒண்ணா உக்காந்து கதைகள் பேசிய காலம் இனி வரப் போவதில்லை.

எப்போ செல்போன் வந்ததோ அப்பவே எல்லாம் காணாம போயிடுச்சுனு பக்கத்துக்கு வீட்ல சில பெண்கள் வருத்தத்தோட பேசுறது காதில் விழுது!

ADVERTISEMENT

உண்மை தானே?

**THE CONTRACTOR**

ADVERTISEMENT

ஏற்கனவே இந்த மாசம் தான் மதுரை ரயில்வே கோட்டத்தில் 600+ , திருச்சி ரயில்வே கோட்டத்தில் 600+ ஹிந்திக்காரன் பணியமர்த்தியது மத்திய அரசு. இந்த நிலையில் மாநில அரசும் இப்ப தமிழை நீக்கி அடுத்து tnpsc பணியிலும் வடக்கனுக வர வழித் தடம் போட்டுட்டு இருக்காய்ங்க.

**ராணி**

பைத்தியம் மாதிரி சிரிக்றது பேர் நகைச்சுவை இல்ல

பைத்தியக்காரத்தனமா சிரிக்க வைக்றது பேர்தான் நகைச்சுவை

**வந்தியதேவ மன்னன்**

ஆங்கிலம்னா English னு வெள்ளகாரனுக்கு தெரிஞ்சிருக்காது…

ஆனா நமக்கு தெரியும்

**Dhivya J**

வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது எவ்வளவு முக்கியமோ

அதேபோல் பிறர் நம்மை தனித்து விடும் போது தன்னம்பிக்கையோடு வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு வாழ்வது பெறும் முக்கியமான ஒன்றாகும்…

**м υ я υ g α η . м**

ஏளனமாய் சிரிப்பவர்கள்

மத்தியில் எதார்த்தமாய் சிரிப்பவர்கள் எவ்வளவோ மேல்.!

**SHIVA SWAMY.P**

குடும்ப பாரங்களை சுமந்துகொண்டு நடக்கும்போது வரும் சிறிய தடைகளைக்கூட கடப்பது அவ்வளவு எளிதானது அல்ல….

தன்னுடைய வாழ்க்கையையும்,

மகிழ்ச்சியையும் தொலைக்கும் அளவிற்கு யாரையும் இங்கே விரும்பத்தேவை இல்லை….

**குழந்தை. செல்வா**

இங்கெல்லாம் அவனவன் வீடு கட்டுனா கடமை முடிஞ்சிது,

கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துட்டா கடமை முடிஞ்சிது,

தங்கச்சிய கட்டி கொடுத்துட்டா கடமை முடிஞ்சிது னு நினைச்சுகிட்டு இருக்கானுங்க..

ஆனா.,

கஸ்டம் அதுலேர்ந்து ஒரு மடங்கு அதிகமா ஸ்டார்ட் ஆகுதுனு அதுக்கு அப்புறம் தான் நினைக்கிறாங்க..!

**காவியதலைவி**

அழகாய் தெரிவதெல்லாம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது…..

ஆனால் மனதிற்கு பிடித்தது மிகவும் அழகாய் தெரியும்….

**Pachai Perumal.A.**

ஏலே சாப்பிடுறதுக்கு முன்னால காக்காவுக்கு சோறுவெச்சிட்டு சாப்பிடு. இன்னைக்கு அம்மாவாசை–ஊரிலிருந்து ஆச்சி அலைபேசியில்.

நான் சாப்பிடவே இன்று சோறுஇல்லை என்பதை எப்படி அவளுக்கு புரியவைப்பேன்?

**கிப்சன்**

இந்தி கத்துக்கிட்டா தான் பொழப்பு நடத்த முடியும் – பாஜகவினர்

போடா… அந்த மோடியே தமிழ் கத்துக்கிட்டு தான் பொழப்பு நடத்திட்டு இருக்காரு

**ஜோக்கர்…**

என்னிடம் நிரந்தர நல்லவனும் இல்லை, நிரந்தர கெட்டவனும் இல்லை..!!!

இப்படிக்கு

“சூழ்நிலை”

**பர்வீன் யூனுஸ்**

தமிழகத்தில் சொக்கத்தங்க ஆட்சி நடைபெறுகிறது – ஜெயக்குமார் #

அதான்.. ஓபிஎஸ் ஸும், இபிஎஸ் ஸும் அடிக்கடி ‘உரசி’கிட்டே இருக்காங்களா..?

**பாலசுப்ரமணி**

ஆவணி கடைசியில்

வலையில் சிக்கிய

பல மீன்கள்

“புரட்டாசியில்”

கருவாடாக மாறியிருக்கும்

**ᗅℍℬⅅ ℳℽ ՏᝪႮℒ**

ரொம்ப….நேசிக்கிறவங்க தான் மனச நோகடிக்கிறாங்க என்பதெல்லாம் சும்மா…,

காரணம் அது இல்லை…

ரொம்ப நேசிக்கிறவங்க கிட்ட இருந்து ஒரு சின்ன….முக சுழிப்பு கூட நம்மால தாங்கிக்க முடியாது…இதான் உண்மை…

**மணிகண்டன்**

ஒரு பிடிக்காத வேலையை கூட பிடிக்கும்படி செய்ய வைப்பதில் திறமை படைத்தவர் -அம்மா

**ஹாசிகா**

மனசு நிறைய அன்பை வச்சிகிட்டு அதை வார்த்தைகளால் வெளிப்படுத்த தெரியாத

உறவுக்களுக்கு எப்பொழுதுமே ஆயுள் அதிகம் தான்…

_லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share