ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.12,230 கோடி நிதி ஒதுக்கீடு

Published On:

| By Balaji

மத்தியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போதைய பாஜக அரசும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, மத்திய அரசு தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைச் செய்பவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.12,230 கோடி நிதியை தற்போது ஒதுக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share