கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில், கடந்த வாரம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. அதில், அந்நாட்டின் போலீஸ்துறைத் தலைவர் டிரான் டாய் குவாங் வெற்றிபெற்று அதிபரானார். இந்நிலையில், பத்தாண்டு காலம் வியட்நாமின் பிரதமராக இருந்த நிவென் டன் ஜூங் பதவி விலகினார். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. துணைப் பிரதமராக இருந்த நிகுயென் சூவான் புக் இன்று, புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார். வியட்நாமில் உள்ள மொத்தம் 490 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 446 உறுப்பினர்கள், நிகுயென் சூவான்புக்குக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து அவர், வியட்நாமின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
உலகம்-வியட்நாம் புதிய பிரதமர்: நிகுயென் சூவான்புக் தேர்வு
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
