ADVERTISEMENT

உணவுச் செயலிகளை வெறுக்கும் மக்கள்!

Published On:

| By Balaji

ஆன்லைனில் ஆர்டர் செய்து உணவுகளை வாங்கி உண்ணும் மக்களில் 83 சதவிகிதத்தினர் மீண்டும் அச்செயலிகளைப் பயன்படுத்துவதில்லை என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட உணவு விநியோகச் செயலிகள் இந்தியாவில் தற்போது பெருகத் தொடங்கியுள்ளன. அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டு மொபைல் போன்களிலேயே உணவுகளை ஆர்டர் செய்து உண்ணும் வழக்கம் இப்போது மக்களிடையே அதிகரித்துள்ளது. உணவுகள் வீடுகளுக்கே கொண்டுவரப்பட்டு டெலிவரி செய்யப்படுவதால், பிஸியான வேலையில் இருப்பவர்களுக்கும் கடைகளுக்குச் சென்று வாங்கி வரமுடியாதவர்களுக்கும் இச்சேவை ஏதுவாக இருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால், இவ்வகைச் செயலிகளை மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவதில்லை என்று ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. சந்தை ஆய்வு நிறுவனமான *கிளவர்டேப்*, உணவு விநியோகச் சேவையில் இயங்கும் 25 உணவுச் செயலிகளிடம் ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இவ்வகைச் செயலிகளை இன்ஸ்டால் செய்யும் நபர்களில் வெறும் 25 சதவிகிதத்தினர் மட்டுமே அதில் பதிவுசெய்து பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இச்செயலிகளை இன்ஸ்டால் செய்து பதிவுசெய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 86 சதவிகிதத்தினர் முதல் இரண்டு வாரங்களுக்குள் அதன் பயன்பாட்டை நிறுத்திவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

*டைம்ஸ் ஆஃப் இந்தியா* நிறுவனம் சார்பாக இதுகுறித்து ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்களிடம் கேட்டதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

ADVERTISEMENT

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**

**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**

**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share