சென்னையில் நாளை நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் சிறப்பு சலுகை வழங்கியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா 1000த்துக்கும் அதிகமான படங்களில் 8,500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1500க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். 1000த்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளரான இளையராஜாவின் லைவ் கன்சர்ட் நாளை (ஜூலை 14) சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனை பார்க்க ரூ.1000 முதல் ரூ.1,00,000 வரையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.சரண், மது பாலகிருஷ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பாட உள்ளனர்.
இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் சென்னை மட்டுமின்றி லண்டன், பாரிஸ் போன்ற இடங்களிலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சில சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது.
“மியூசிக் மெட்ரோ மேஜிக்: இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மார்க் மெட்ரோ உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது.
இசை ஆர்வலர்களுக்கான சிறப்புச் சலுகையாக, கச்சேரி டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு (Paytm Insider மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்) பிரத்யேக மெட்ரோ பாஸ்கள் (unique QR code) கூடுதல் கட்டணமின்றி வழங்கப்படும்,
இது அவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்று நிகழ்ச்சியை கண்டுகளித்து மெட்ரோ வழியாக அவர்கள் இடத்திற்கு திரும்புவதற்கு உதவும்.
இந்த சிறப்பு மெட்ரோ பாஸ்களை ஒரு சுற்றுப்பயணத்திற்குப் பயன்படுத்தலாம் (2 நுழைவு & 2 வெளியேறு). மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி வாயில்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் மெட்ரோ பாஸ்களை ஸ்கேன் செய்யலாம்” என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அமலுக்கு வந்த புதிய மதுவிலக்குத் திருத்தச் சட்டம் : என்னென்ன தண்டனைகள்?