இலங்கையில் வரலட்சுமி

Published On:

| By Balaji

கதாநாயகியாக மட்டுமின்றி கதையின் தன்மைக்கேற்ப முக்கிய கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வரும் நடிகை வரலட்சுமி, புதிய படத்திற்காக இலங்கை சென்றுள்ளார்.

சண்டக்கோழி 2, எச்சரிக்கை, கன்னிராசி, விஜய் 62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா 2, வெல்வெட் நகரம் என அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வரலட்சுமி, காட்டேரி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, வரலட்சுமி உட்பட ஆத்மிகா, சோனம் பாஜ்வா மற்றும் மணாலி ரதோட் என நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது. படப்பிடிப்புத்தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை வரலட்சுமி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்குகிறார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, விக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share