இரு அறைகள் கொண்ட பிளாட்… மொபைல் கிடையாது… யார் இந்த ஜிம்மி டாடா?

Published On:

| By Kumaresan M

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா அக்டோபர் 9 ஆம் தேதி மறைந்தார். அவரின் உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. இனிமேல் டாடாவின் நிர்வாக பொறுப்பை ரத்தனின் ஒன்று விட்ட சகோதரரான நோயல் டாடா மற்றும் அவரின் குழந்தைகள் பார்க்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில், ரத்தன் டாடாவுக்கு உடன் பிறந்த சகோதரர் ஒருவரும் உண்டு. அவரின் பெயர் ஜிம்மி டாடா. இவர், பெரிய அளவில் டாடா குழும நிர்வாகத்தில் பங்கேற்றதில்லை. ஆனால், மற்றவர்களுக்கு உள்ளது போல அனைத்து நிறுவனங்களிலும் இவருக்கும் பங்குகள் உண்டு. மும்பையில் கொலோபா பகுதியில் இரு அறைகள் கொண்ட பிளாட்டில் வசித்து வருகிறார்.

ரத்தன் டாடா போலவே இவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனியாகவே வசிக்கிறார். மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. டி.வி பார்ப்பது, புத்தகங்கள், செய்தி தாள்கள் வாசிப்பது என பொழுதை கழிக்கிறார். இவர், மிகச்சிறந்த ஸ்குவாஷ் வீரரும் கூட.

கடந்த 2023 ஆம் ஆண்டு ரத்தன் டாடா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தம்பி ஜிம்மி டாடாவுடன் இருக்கும்  இளம் வயது புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். 1945 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் அவர்களின் வளர்ப்பு நாயும் உடன் இருந்தது.  அந்த பதிவில், “மகிழ்ச்சியான நாட்கள், எங்களுக்குள் எந்த பிரிவும் இருந்ததில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். ரத்தன் டாடாவின் மறைவையடுத்து நேற்று ஜிம்மி டாடா அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.  அவர்,  வீல் சேரில் வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்தன் டாடாவும் ஜிம்மி டாடாவும் நேவல் டாடா – சூனி டாடாவின் குழந்தைகள் ஆவார்கள்.  ரத்தனுக்கு 10 வயதாகும் போது, பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர். பின்னர், இருவருமே வேறு திருமணம் செய்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 வாழை டூ ஸ்த்ரீ 2 : இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

வரிப்பகிர்வு – உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி : தமிழ்நாட்டிற்கு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share