பசியோடு யாரும் உறங்கக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில், குஜராத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறது ஒரு ரொட்டி வங்கி.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஸ்ரீ போல்பலா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. உணவில்லாமல் அவதிப்படுபவர்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இந்த அறக்கட்டளை உணவளித்து வருகிறது. பசியோடு யாரும் உறங்கக்கூடாது என்பது தான் இந்த அறக்கட்டளையின் நோக்கமாக உள்ளது. இதனைச் செயல்படுத்தும் விதமாக உணவை விநியோகித்து வருகிறது ரொட்டி வங்கி.

“அறக்கட்டளை சேவகர்கள் மூலம் ஆட்டோ ரிக்ஷாவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று ரொட்டிகளைச் சேகரிப்போம். ஒவ்வொரு வீட்டிலும் 2 ரொட்டிகள் என்று சேகரித்து, உணவில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு அவற்றை விநியோகிப்போம்” என்கிறார் இந்த அறக்கட்டளையின் அறங்காவலர் ஜெயேஷ் உபாத்யாய்.
“வெற்று வயிற்றுடன் யாரும் உறங்கச் செல்லக்கூடாது என்ற நோக்கம் எங்களுக்கு உள்ளது. பிகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ரொட்டி வங்கிகள் செயல்பட்டு வருவதை வீடியோக்களில் பார்த்தோம். அதை முன்னுதாரணமாக வைத்து குஜராத்தில் ரொட்டி வங்கிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்கின்றனர் இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள்.
குஜராத், பிகார், பஞ்சாப் மாநிலங்கள் போலவே, மகாராஷ்டிராவிலுள்ள அவுரங்காபாத்திலும் ரொட்டி வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://minnambalam.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://minnambalam.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://minnambalam.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://minnambalam.com/k/2019/05/18/52)
**
.
.
�,”