ADVERTISEMENT

இயற்கையைக் காப்பாற்ற விழிப்புணர்வு மாரத்தான்!

Published On:

| By Balaji

இயற்கை வளங்களையும், நீர் ஆதாரங்களையும் பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரியில் உள்ள குலசேகரம் பேருந்து நிலையத்தில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளான நேற்று (நவம்பர் ௦1) ப்ரண்ட்ஸ் ஆஃப் நேச்சர் என்ற அமைப்பின் தொடக்க விழா ஆத்தூர் பகுதியில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இயற்கையைக் காப்பாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தக் குலசேகரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆற்றூர் பள்ளி வரையிலான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் பந்தயம் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. மனோ தங்கராஜ் தலைமையில் நடந்தது. இந்த மாரத்தான் ஓட்டத்தில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஆகியோருடன் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு குலசேகரம் -ஆற்றூர் சாலையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share