இன்றைய சினிமா சிந்தனை!

Published On:

| By Balaji

தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த நூறு படங்களை பட்டியலிட வேண்டுமென்றால் அதில் இயக்குநர் மகேந்திரனின் படங்கள் கட்டாயம் இடம்பெறும். இலக்கியங்களில் இருந்தே பெரும்பாலும் திரைக்கதை அமைத்த அவர் சினிமா மேல் பெரிய காதல் கொண்டவர் இல்லை. இதை வெளிப்படையாக அவரே ஒத்துக்கொள்கிறார். அவரது பின்வரும் கூற்றின் மூலம் சினிமாவை அவர் எப்படி அணுகியுள்ளார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

**“தமிழ் சினிமாவைத் தவிர வேறு எதையுமே பார்க்காமல் இருந்தவன் நான். யதேச்சையாக இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்த்தேன். அதன்பின் தமிழ் சினிமாக்கள் மீது வெறுப்பு வந்துவிட்டது. இங்கு பல உன்னதக் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் உருவாக்கப்படுவது சினிமா இல்லை. காலத்தின் கட்டாயத்தால் வெறுப்புடன் இந்த துறையை ஏற்றுக்கொண்டேன். இந்தப் பிழைப்பு வேண்டாமென, பலமுறை சினிமாவை விட்டு ஓடியிருக்கிறேன். நான் செய்த தவறுகளுக்கு மட்டும் நான் பொறுப்பே தவிர; நான் செய்த நன்மைகளுக்கும், சாதனைகளுக்கும் நான் பொறுப்பல்ல. இது தன்னடக்கமில்லை, எனது வாக்கு மூலம். சினிமாவை விட்டு ஓடிச் சென்றவனை விடாமல் பிடித்துக் கொண்டதற்காக, சினிமாவுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், நான் அந்த சினிமாவை இதுவரை அன்போடு நெருங்கவில்லை.**,”

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share