ADVERTISEMENT

இந்தியா: புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முதலீடு – 34 சதவிகிதம் அதிகரிப்பு

Published On:

| By Balaji

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் இந்தியாவின் முதலீடு 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 7.6 பில்லியன் டாலர் முதலீடு செய்த இந்தியா, 2015ம் ஆண்டில் 10.2 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இது 34 சதவிகிதம் அதிகம் ஆகும். இத்துறையில் சீனா 22 சதவிகிதமும், அமெரிக்கா 17 சதவிகிதமும், இங்கிலாந்து 25 சதவிகிதமும் முதலீட்டை அதிகரித்துள்ளன. ஆனால் சீனா 102.9 பில்லியன் டாலரும், அமெரிக்கா 44.1 பில்லியன் டாலரும், இங்கிலாந்து 22.2 பில்லியன் டாலரும் இத்துறையில் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2014 மற்றும் 2015ம் ஆண்டு செய்த முதலீட்டின் அடிப்படையில் ஒப்பிட்டால் மட்டுமே, இந்தியாவின் 34 சதவிகிதம் மற்ற நாடுகளை விட அதிகம் போல தெரியும். ஆனால் ஒட்டுமொத்த அடிப்படையில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கி உள்ளதையே இது காட்டுகிறது. இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் சூரிய மின்சக்தி உற்பத்தியிலேயே அதிக அளவிலான முதலீடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share