இந்தியாவுக்கு எதிரான தொடரில் ஜோ ரூட் மிஸ்ஸிங்

By Balaji

|

Published on 1 Jan 2017, 12:00 AM

மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 15-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன் 10 மற்றும் 12-ஆம் தேதிகள் இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குழந்தை பிறக்கும் நேரத்தில் மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என ஜோ ரூட் நினைக்கிறார். இதனால் இந்தியாவிற்கு எதிரான தொடரில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. இதை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் 491 ரன்கள் குவித்தார். இவர் விளையாடாதது இங்கிலாந்து அணிக்கு சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel