இந்தியர்கள் என்றாலே அவர்கள் வத்தலும் தொத்தலுமாக இருப்பார்கள் என்பதுதான் பொதுவாக உலகளாவிய எண்ணம். ஆனால் இப்போது நகர்ப்புறம் சார்ந்து உடல் பருமன் அதிரித்துச் செல்லும் ஒரு தலைமுறை உருவிட்டது. உடல் பருமன் என்பது ஒரு நோயோ மருத்துவக் குறைபாடோ அல்ல, உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் உடல் பருமனாகி விடுகிறது. உடலில் சுரக்கும் அமிலங்களால் உடல் பருமனாவது மட்டுமே ஒரு குறைபாடு.ஜங்க் பூட் எனப்படும் துரித உணவுகளால் இப்போது உடல் பருமன் அதிகரிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிரிகரித்துச் செல்கிறது.உடல் பருமன் தொடர்பாக நேற்று மக்களவையில் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, “2013ம் ஆண்டு 6.5 கோடி பேர் உடல் பருமன்மிக்கவர்களாக இருந்தனர். 2014ம் ஆண்டு 6.68 கோடியாகவும், 2015ம் ஆண்டில் 6.91 கோடியாகவும் இது அதிகரித்தது. உடல் பருமன் அதிகமுள்ளோர் மாநிலமாக பஞ்சாப் முதல் இடத்தில் உள்ளது. கேரளா மற்றும் டெல்லி அடுத்த இடங்களில் உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உடல்பருமனானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
Published On:
| By Balaji
Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
