இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மாணவர்கள் இன்ஜினியரிங் முடிக்கிறார்கள். இதில் 60% மாணவர்கள் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் திண்டாடுகின்றனர் என்று நேற்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஒரு புள்ளிவிவரத்தை கூறியுள்ளது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் நபர்களின் உழைப்பு வீணாகிறது.மேலும், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் தொடங்கஇருக்கும் இன் ஜினியரிங் கல்வியாண்டுக்காக ஒரு சதவீதம் மாணவர்கள் இன்டர்ன்ஷிப் மேற்கொள்கிறார்கள். அனைத்து இந்திய நுழைவுத்தேர்வு எழுத, கோச்சிங் கிளாஸ் செல்கின்றனர். அப்படி படிக்கும் மாணவர்கள் முறையான அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் நுழையாததால், வேலைவாய்ப்பு இல்லாமல் அவதியுறுகின்றனர்.
இதனால் தான் வருகிற 2018-ல் இருந்து நீட் தேர்வைக் கொண்டுவருவதாக அரசுத்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த நீட் தேர்வு முறையால் கிராமப்புற மற்றும் நடுத்தர மக்கள் கல்விபயில்வதில் சிரமம் ஏற்படும் என மற்றொருசாரர் தடுக்கின்றனர்.
பாடப்புத்தகத்தில் இருப்பதைப் பயிற்றுவிப்பது மட்டும் சிறந்த கல்வியாகிவிடாது. அவர்களைச் சுயம் சார்ந்து சிந்திக்கச் செய்யவதே நல்ல கல்வி. அதைப்பெற, மத்திய, மாநில அரசுகள் வேலையில்லா இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, சுயதொழில் தொடங்க வழிவகை செய்யவேண்டும். பல தொழில் நிறுவனங்களை உருவாக்கவேண்டும். இன்னும் மதுரையிலும் நெல்லையிலும் சேலத்திலும் குறைந்த அளவிலேயே வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால், பட்டதாரிகளால் என்னசெய்யமுடியும்? அதனால் தான் அவர்கள் சென்னை, கோவை, பெங்களூர் என தொழில்நகரங்களை நோக்கி வட்டமிடுகின்றனர். இதனால்தான், வேலைகிடைப்பதில் கடும்போட்டி உருவாகிறது. வேலைதேடிச்செல்லும் இன் ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, சொற்ப வருமானமான ரூபாய் 6,000 சம்பளத்தில் வேலை கிடைக்கிறது.
சில நேரங்களில் படிப்புக்கே சம்பந்தமில்லாத, பலதுறைகளில் இன்ஜினியரிங் மாணவர்கள் நொந்துபோய் வேலைசெய்கின்றனர்.
அரசின் கவனம் வேலையில்லா பட்டதாரிகளின் மேல் இனியாவது குவியுமா?









