கடந்த இரண்டு ஆண்டுகளாக போக்குவரத்து துறையில், இந்தியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை இணைத்துக் கொண்டுள்ளது. விமானப் போக்குவரத்துக்கும் ரயில் போக்குவரத்துக்கும் சூரியசக்தி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது படகையும் சூரிய சக்தி மூலம் இயக்கும் முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி வாரணாசியில் சோலார் படகு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் நீர் வழிப் போக்குவரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் சோலார் படகு இயக்கப்படுகிறது. இந்த படகில் 75 பயணிகள் பயணம் செய்யலாம். இதற்கான கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பேட்டரி மற்றும் மோட்டார் பணியகம் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடைந்து, ஜுன் மாத இறுதிக்குள் சோலார் படகு வெற்றிகரமாக நீர் வழி போக்குவரத்தில் செயல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக சூரிய வெளிச்சத்தில் இந்த படகு 5 முதல் 6 மணி நேரம் வரை இயங்கக்கூடியது. சோலார் படகில் அவசர நேரத்துக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன. பயணம் முடிந்தவுடன் பேட்டரிக்குச் சார்ச் போட்டுக் கொள்ளலாம். கப்பல் தயாரிப்பாளர் சந்தித் தண்டாசெறி, படகின் பேட்டரி லித்தியம் என்னும் பொருளால் செய்யப்பட்டது என்று தெரிவித்தார். கேரளா நீர் வழி போக்குவரத்து துறை இந்த சோலார் படகு 2.5 கி.மீ தூரத்துக்கிடையே உள்ள வைக்கம் முதல் தனவனக்கடவு வரை செல்லும் என அறிவித்துள்ளது. இந்த சோலார் படகு முயற்சியை சந்தித் தண்டாசெறி 2009-ம் ஆண்டில் ஈடுபட்டார். ஆனால், அது வெற்றிடையவில்லை. தற்போது வெற்றியடைந்துள்ளது.
டீசலில் இயங்கும் படகோடு சோலார் படகை ஒப்பிடும்போது சோலார் படகில் பல நன்மைகள் உள்ளன. இந்தப் படகு நீர் மாசுபாட்டைத் தடுக்கிறது. டீசல் வாசனையைத் தவிர்க்கிறது. இதில் அதிர்வுகள் மிக குறைவாக இருக்கும். இதமான பயணமாக அமையும். மேலும், இதில் கட்டணம் மிகக் குறைவு. மற்ற மாநிலங்களில் நீர் வழி சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகள் சோலார் படகைப் பயன்படுத்துகிறார்கள். இதில் 20 பயணிகள் தாரளமாக அமரலாம். இந்த சோலார் படகை இந்தியாவின் பிற பகுதிகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று தண்டாசெறி கூறினார்.
மற்ற நாடுகளில் சோலார் படகு சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சோலார் படகை உருவாக்குவது மிக எளிதான முறையாகவும் காணப்படுகிறது என்று தண்டாசெறி கூறினார்.
http://scroll.in/article/809299/solar-powered-ferry-to-debut-in-sunlit-kerala
