டெல்லியில் மாணவி நிர்பயா பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. 2012ல் நடந்த இந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. இந்த சம்பவத்தில் மடிந்த இளம்பெண் நிர்பயா குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த பேட்டியும் அடங்கிய இந்தியாவின் மகள் (India’s Daughter) என்ற பிபிசியின் ஆவணப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர் அளித்த பேட்டியாலும், அவரின் வன்மமான வார்த்தைகளாலும் இந்த ஆவணப்படம் இந்தியாவில் 2015 -ல் தடை செய்யப்பட்டது. இந்தப்படம் தற்போது ஒலிப்பதிவிற்கான எம்.பி.எஸ்.இ. (Motion Picture Sound Editors) எனப்படும் ‘கோல்டன் ரீல்’ என்ற சர்வதேச விருதை சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டியின் உதவியாளரான சம்பத் ஆழ்வார் இப்படத்தின் ஒலிப்பதிவை மேற்கொண்டார். சென்னையைச் சேர்ந்த சம்பத் ஆழ்வார் சிறந்த சவுண்ட் என்ஜினியர் சர்வதேச விருதை வென்றிருப்பது நாம் பெருமை கொள்ளத்தக்க விஷயம். அவரை வாழ்த்துவோம்!
‘இந்தியாவின் மகள்’ ஆவணப்படத்திற்காக விருது வென்ற தமிழர்!
Published On:
| By Balaji
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
