– (அண்மையில் அணு ஆற்றல் பாதுகாப்பு மாநாடு வாஷிங்டனில் நடந்தது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அணு ஆயுத ஒழிப்பில் இந்தியாவின் முயற்சிகள் குறித்துப் பேசினார். ஆனால், நிறைவு விழாவில் பேசிய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவோ தென் ஆசியாவில் அமைதி நிலவ இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குறைப்பது அவசியம் என்றார். தெற்காசிய பிராந்திய அரசியல் விமர்சகர் என். சத்திய மூர்த்தி இது குறித்து அலசுகிறார்.)
அமெரிக்க அதிபர் ஒபாமா, தலைநகர் வாஷிங்டனில் இரண்டு நாள் நடைபெற்ற அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டின் இறுதியில் ஏன், இந்திய-பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் குறைப்பு பற்றி குறிப்பிட்டார் என அனுமானிக்க முடிகிறதா? நாடுகள் தங்களது அணுசக்திப் பயன்பாடு மற்றும் திட்டம் குறித்தும் ராணுவ கோட்பாடுகள் குறித்தும் பொதுவெளியில் விவாதிக்கக் கூடாது. அதிபர் ஒபாமா குறிப்பிட்டபடி, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் அணு ஆயுதக்குறைப்பு பற்றி பேசி வருகின்றனவே ஒழிய அதைச் செய்திடவில்லை .
இந்தியாவின் பொக்ரான் II க்குப் பிறகும், சீனா மிக முக்கியமான அணு ஆயுத சக்திகொண்ட நாடாக இருக்கிறபோது, அமெரிக்கா அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்காதது ஏன்? எப்படி? என்ற கேள்வி எழுகிறது. வாஜ்பாய் அவர்களின் ரகசியக் கடிதம் பில் கிளின்டன் அவர்களுக்கு எழுதிய கடிதம் வெளிக்கசிந்தது. இதன்பின்னுள்ள காரணம் என அமெரிக்கர்கள் நம்புகின்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் சீனாவே அணு ஆயுத அச்சுறுத்தலாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் .
கடந்த சில வருடங்களாக, சீன ஊடுருவல்களும் எல்லை அழிப்பு நடவடிக்கைகளும் அருணாச்சலப் பிரதேசத்தைத் தாண்டி, தூண்டுதலற்ற முறையில் நடந்துகொண்டுள்ளன. கார்கில் போரின்போது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் பிரகடனம் குறிப்பிடத்தக்கது. இந்தியத் துருப்புகள் பாகிஸ்தான் எல்லைக்குள் வரும்போது அணு ஆயுதங்கள் பயன்படுத்த நேரும் எனக் கூறியிருந்தார் .
பாகிஸ்தான், ரஷ்யாவின் மன்னிப்பை இனியும் பெறமுடியாது. ஆனால் அது, இந்தியாவை ஒப்பிடும். சீனாகூட எப்போதும் ரஷ்யாவை கேள்விக்குட்படுத்தவில்லை. உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வளர்ந்து வரும் வல்லரசு நாடு, அவர்களால் அமெரிக்க ஆதிக்கத்தை பசிபிக் கடலுக்கு அந்தப் பக்கத்தோடு நிறுத்த முடியவில்லை. அவர்கள் தனியாரா, பொதுத்துறையா அதுபோலவா என்பதைப்போல. ரஷ்யாகூட அமெரிக்காவைக் குறிப்பிடுகிறது.
ரஷ்யா , ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கிடையிலான பனிப்போர் நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. ஆனால், அப்பொழுதும் அமெரிக்க நேட்டோ படைகள் ஐரோப்பாவில் நிகழ்த்திய ஆயுதச் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், ஒபாமா சீனா மற்றும் அமெரிக்காவின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகாரம்பெறாத கூட்டு கணக்கற்ற அணு ஆயுத செயல்பாடுகள் பற்றி பேசாதது குறிப்பிடத்தக்கது .
அரசுகளற்ற நபர்கள்
இந்த மாநாட்டின் மிக முக்கியமான விசயம், ஒபாமா தவறான விசயங்களின் பக்கம் நின்று பேசுவது. தவறான நபர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் சென்றுசேர்வது பற்றி அதிகம் அழுத்தம் கொடுக்கப்படவில்லை. பாகிஸ்தான் மட்டுமே அமெரிக்காவின் இலக்காக இருக்கிறது. பாகிஸ்தானின் அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றிய எச்சரிக்கைகளும் நின்றபாடில்லை.
இப்படியான அக்கறையை பொக்ரான் II சோதனைக்குமுன்பு அமெரிக்கா வெளிப்படுத்தியதில்லை. பொக்ரான் II சோதனையால் பாகிஸ்தான் தூண்டப்பட்டு, சகாய் I & II சோதனைகளை நிகழ்த்தியபோது அமெரிக்கா, தான் அறிந்திருந்த உண்மையை வெளிக்காட்டாது மகிழ்ந்தது. A.Q கான் பாகிஸ்தான் அணுஆயுத வரலாற்றில் இருந்து வசதியாக நீக்கியது பாகிஸ்தான் மட்டுமல்ல; அமெரிக்காவும் அதையே செய்துவருகிறது.
முதல்முறையாக, அமெரிக்கா பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் அரசு அற்ற நபர்கள்வசம் சேர்வதுபற்றி குறிப்பிட்டுள்ளார் . இது, ஐ.எஸ். அமைப்புகளைக் குறிப்பிடுவதனால் வரவேற்புக்குரியது என்றாலும் பாகிஸ்தானையும், இந்தியாவையும் சமமானமுறையில் வைத்துப் பேசுவது எப்படி என விளக்கமளிக்க வேண்டும். அதுவும், பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட நபர்கள் கையில் அணு ஆயுதங்கள் சேர்ந்துவிடாமல் இருக்க இந்தியா செய்துவரும் முயற்சிகள்பற்றி பேசியபிறகும் ஒபாமா அவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.
தாராளவாதமும், இகழ்வுமிகு நடைமுறையும் மேற்கத்திய அணுகுமுறையின் வெளிப்பாடுகள். அந்த வகையில்தான் அமெரிக்கா, இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகள் அணு ஆயுதங்களைக் கையாளத் தகுதியானவையல்ல எனக் கூறுகிறது. ஆனால், அவர்கள் தங்கள் உள்நாட்டில் தமது குடிமக்கள் வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் சவாலாக நடந்த செப்டம்பர் பதினொன்று நிகழ்வை வசதியாக மறந்துவிடுகின்றனர். இதேபோன்ற தாக்குதல்கள் ஐரோப்பியத் தலைநகரங்களிலும், மாஸ்கோவிலும் சமீபத்திய வருடங்களில் நடந்துள்ளது. பாகிஸ்தான் எல்லா விசயங்களிலும் தவறு நடக்க வாய்ப்புகொண்ட அரசாக, மேற்கத்திய புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார, புவிசார் திட்டங்களுக்கு இலக்காகி உள்ளது.
அல்கொய்தா அடிப்படைவாதிகளின் புகலிடமாக இருக்குமானால், அவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதில், ஐ.எஸ். உளவு அமைப்புக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் உலகின் மற்ற நாடுகளைவிட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்தவர்களே ஆவர். சிரியா மற்றும் ஈராக் தாண்டி ஐ.எஸ். ஆப்கனிலும் அல்கொய்தாவை எதிர்த்து அரசியல் மற்றும் ராணுவரீதியாகப் போட்டியிட தகுதியோடு இருப்பதாக நம்புகிறது. இரண்டுமே அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவை . இரண்டின்மீதான கட்டுப்பாட்டையும் அமெரிக்காவே கொண்டிருக்கிறது. ஆப்கனின் போர்ச் சூழல் திணிப்பு அவர்களால் உருவாக்கப்பட்டதே.
இறையாண்மையின்மீதான சமரசம்
அணுஆயுத பயன்பாடு குறைப்பு பற்றி பேசும்போது இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஒரேநிலையில் வைத்து பொதுவெளியில் பேசுவதென்பது உள்நோக்கம் மிகுந்தது. இந்த நாடுகளில் அரசுகள்மீதான அரசியல் எதிர்ப்பு மற்றும் மற்ற விமர்சனங்கள் குறைந்து, இந்த அரசியல் தலைமைகள் எதுவும் நடப்பதற்குமுன்பே இறையாண்மையை சமரசம் செய்துகொள்ளப்படுகிறது.
உண்மையில், அமெரிக்கா ஏதாவது நல்லெண்ணத்துடன் இயல்பு நிலை கொண்டுவர ஏதேனும் முயற்சிகள் எடுக்க விரும்பினால் தென்னாசிய பிராந்தியத்தில் இரண்டு நாடுகளின் நல்லுறவை மேம்படுத்துவதே. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரபரப்பில் போட்டியாளர்கள் மத்தியில் பொதுமக்களிடையே நற்பெயர் பெறுவதற்கான முயற்சியே. குடியரசுக் கட்சியின் ட்ரம்ப் அவர்கள் இன்னும் கட்சித் தலைவர்களின் அபிப்பிராயத்தைப் பெறாதநிலையில் இம்முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தென்னாசியப் பகுதியில் இரு நாடுகளில் இயல்புநிலை நிலவ உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கத் தலையீடு தேவையற்றதாக உள்ளது. இந்தியா சிம்லா ஒப்பந்தம், லாகூர் ஒப்பந்தம், பிரதமரின் அரசியல் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் அழுத்தம் மிகப்பெரிய அளவில் பிரதமர்மீது இருக்கிறது.
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் பற்றி குறைவாகவே சொல்லப்படுகின்றன. பாகிஸ்தான் அரசிடம் கேள்விகள் கேட்கப்பட்டாலும் அது, அமெரிக்காவின் அனுமானங்களை ஏற்கும்போது, அந்நாடு சொந்தமாக அணு ஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படாது. இக்கேள்விகளுக்கு எப்போதும் நவாஸ் ஷெரீப் பதிலளித்ததில்லை.
– கட்டுரையாசிரியர் என். சத்திய மூர்த்தி அப்சர்வர் ஆராய்ச்சி மன்றம் சென்னை பிரிவு மூத்த ஆராய்ச்சியளராக உள்ளார்.
– தமிழில் த. ஜீவலட்சுமி கவிஞர், வழக்குறைஞர், பெண்ணிய செயற்பாட்டாளர்.
http://www.orfonline.org/expert-speaks/us-nuclear-concerns-real-but-targets-wrong/
