ADVERTISEMENT

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா? – அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

என்ன இருந்தாலும் கேப்டன் ட்ரெண்டாகிற மாதிரி வேற யாருமே இல்லை. மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் கருணாநிதியைப் பார்த்தது, வைகோ-வின் ட்விட்டர் அக்கௌன்டை மேனஜ் பண்ணுபவர் போடும் தவறுகள்கொண்ட ட்விட்கள், பாரிவேந்தருக்கு 45 சீட்டுகள் அள்ளிக்கொடுத்து வள்ளல் பட்டம் தேடிக்கொண்ட பாஜக என எவ்வளவோ இருந்தாலும் கேப்டன் மக்களையோ, பத்திரிகையாளர்களையோ, சந்திக்கிற மாதிரியான எண்டர்டெயின்மென்ட் எதிலேயுமே இல்லை.

//‏@kolikodgovindan

ADVERTISEMENT

சந்திரகுமார் கருணாநிதியுடன் சந்திப்பு//இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சந்திரகுமாரா?//

// @Perungayam

ADVERTISEMENT

அக்கா வீரலட்சுமி அண்ணியாருக்கு பின்னாடி உக்காந்து இருக்கு, ஒரு முதல்அமைச்சர் வேட்பாளருக்கு நேர்ந்த மாபெரும் துயரம்//

//திருவாரூர்காரன் ‏@beingmrk

ADVERTISEMENT

டாஸ்மாக் கலைக்கப்படும்-திமுக #அப்டீன்னா திரும்பவும் ஸ்டார் ஒயின்ஸ், குஷ்பு ஒயின்ஸ், ரம்பா ஒயின்ஸ் வரும்னு அர்த்தம். ஆனா தலைவர் கில்லிய்யா.!//

// ‏@skpkaruna

SDPI மநகூ-யில் சேர்கிறதாம்! இப்படியே ஒவ்வொண்ணா சேர்த்து கேப்டனையும் அதே 25 சீட்டுக்கு கொண்டு வந்துர்றதுதான் திட்டம்போல! ???? #வைகோ ராஜதந்திரங்கள்//

//@mekalapugazh

பாரிவேந்தர் கட்சிக்கு அதிக இடம் கொடுத்ததால்…பயந்துகொண்டு புதிய நீதிக்கட்சி பாஜக கூட்டணியிலிருந்து விலகியது..:))))//

// @tamilanbudan

பிஜேபி அணியில் ஐஜேகே கட்சிக்கு 45 தொகுதிகள்

# அத்தனை பேருக்கும் நான் எங்க போவேன்னு பச்சமுத்து மயக்கம் போட்டு விழுந்திருப்பாரே! //

// @iVenpu

யாரோ தேவநாதனாம், 25 சீட் பாஜக கொடுத்திருக்காம்.. MLA வேட்பாளர் ஆக நினைக்குறவங்க இப்பவே அங்க சேந்து உங்க பேரை வோட்டிங் மெஷின்ல பாத்துடுங்க‌ //

//@karthiykj

பிஜேபி கூட்டணியில் ஐஜேகே கட்சிக்கு 45 இடங்கள் ஒதுக்கீடு ????????????

அடேய், அந்தக் கட்சி தமிழ்நாட்ல இருக்குறது 45 பேருக்குக்கூட தெரியாதே????????//

//@iyyanars

எனக்கென்னவோ…இந்த பாரிவேந்தர், பேச்சுவார்த்தையின்போது…’நாலு அல்லது ஐந்து’ போதும்னு விரலை மட்டும் காட்டி இருப்பார்னுதான் தோனுது! //

‏// @HAJAMYDEENNKS

பாஜக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கீடு #

பாரிவேந்தர்னு பெயரைக் கேட்டவுடனே அள்ளிக் கொடுத்துட்டாங்கபோல…! //

*****************************************************************************************************************************

எழுத்தாளரும், பதிப்பாளருமான பத்ரி சேஷாத்ரி திமுக தேர்தல் அறிக்கை வெளியானது முதல் விமர்சித்து வருகிறார். நேற்று இரவும் அவரின் முகநூல் ஸ்டேட்டஸ் அதுகுறித்தே இருந்தது.

//Badri Seshadri

14 hrs ·

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி 416: ஆவின் பால் விலை லிட்டருக்கு 7 ரூபாய் ‘உடனடியாக’ குறைக்கப்படும்.

இதனால் ஆகும் செலவு என் மதிப்பீட்டின்படி குறைந்தபட்சம் 1800 கோடி ரூபாய். இதன் பாதகங்கள் பல. ஆவின் புது பால் கார்டுகளைத் தராது. இது, சில ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்தது. பால் கொள்முதல் விலையைக் குறைக்காவிட்டால் ஆவின் கடுமையான நஷ்டத்தில் மூழ்கும். கொள்முதல் விலையைக் குறைத்தால் மாடு வைத்திருப்பவர் பாதிக்கப்படுவார். இன்று, நிறைய தனியார் நிறுவனங்கள் வந்துவிட்டதால் அவர் ஆவினுக்குப் பதில் இந்தத் தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்துவிடுவார்.

பால் விலை ஏறும்போது மக்கள், ஜெயலலிதாவைச் சபித்தாலும் பொருளின் விலை என்பது அவ்வப்போது சந்தை அடிப்படையில் ஏறியபடிதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருப்பார்கள். மக்களின் வாங்கு சக்தியை அதிகரிக்க வேண்டுமே ஒழிய, இப்படியெல்லாம் தலையிட்டால் குழப்பம்தான் மிஞ்சும். //

-லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share