சர்வதேச அளவில் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
இணையப் பயன்பாடு குறித்து *மேரி மீக்கர்* நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச ஆய்வறிக்கையில், 770 கோடிப் பேரைக் கொண்ட உலக மக்கள்தொகையில் 380 கோடிப் பேர் இணையம் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதில் 12 சதவிகிதத்தினர் இந்தியர்கள். அதாவது உலக அளவில் இணையப் பயன்பாட்டாளர்களை அதிகமாகக் கொண்ட நாடுகளுக்கான பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் சீனா உள்ளது. சீனாவின் பங்களிப்பு 21 சதவிகிதமாகும்.
இந்தியா, சீனாவைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், ஜப்பான், ரஷ்யா, மெக்ஸிகோ, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. பிராந்திய அடிப்படையில் ஆசிய பசிபிக் பகுதி உலகின் ஒட்டுமொத்த இணையப் பயன்பாட்டாளர்களில் 53 சதவிகிதத்தினரைக் கொண்டுள்ளது. உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் 27 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வோர் ஆண்டுக்கும் 4 கோடிப் பேர் இணையப் பயன்பாட்டில் புதிதாக இணைவதாக இந்த ஆய்வு கூறுகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பின்னர் இந்தியாவில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாஜக அழைப்பு: அலைபாயும் ஜி.கே.வாசன்](https://minnambalam.com/k/2019/06/12/20)**
**[சட்டமன்றக் கூட்டம்: எடப்பாடியின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/06/12/25)**
**[ஒற்றைத் தலைமை பற்றி பேசவில்லை!](https://minnambalam.com/k/2019/06/12/46)**
**[வாரிசுகள் தோல்வியடைந்த வரலாறு](https://minnambalam.com/k/2019/06/12/22)**





