‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் ‘மைக்செட் சித்தன்’ தலையில துண்டைப் போட்டு உக்காந்திருக்கிற போஸை நினைச்சுக்குங்க, அப்படித்தான் இணைய திமுக-வினர், கேப்டனின் தனித்துப் போட்டி என்ற அதிரடி முடிவைக் கேட்டு உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தப் பக்கம் பர்சண்டேஜில் குறைவாக இருந்தாலும் ‘ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’ என ‘உத்தமராசா’ செந்திலாக துள்ளாட்டம் ஆடிவருகிறார்கள் இணைய அதிமுக-வினர். நேற்று இரவிலிருந்து கேப்டன், திமுக, பால், பழம்-னுதான் தமிழ் ட்விட்டர் சந்து முழுவதும் இருக்கு. கேப்டனை, கருணாநிதியையும் திமுகவையும் கொஞ்சம்கூட மிச்சம்வைக்காமல் கலாய்த்துத் தள்ளினர் ஆன்லைன் மக்கள். மீம் கிரியேட்டர்கள் எல்லாம் ஓவர்டைம் எடுத்து வேலை செய்யுறாங்க. இணையத்தில் பெரிய மீம் திருவிழாவே நடந்துக்கிட்டு இருக்கு. அதில, சில மீம்கள் இங்கும். சில ட்விட்களும்.
anikandan @manikandan00006
கூட்டணிணு கூப்பிட்ட எல்லாரும் ஜெயிச்சா முதல் கையெழுத்தே மதுவிலக்குனு சொல்லும்போதே நெனைச்சேன் கேப்டன் யாரு கூடவும் கூட்டணி வைக்க மாட்டாருனு
குணா யோகச்செல்வன் @g4gunaa
தேத்து வரைக்கும் பர்பீ கெடக்குதான்னு சாக்கடைக்குள்ள கைய்ய உட்டு தேடீட்ருந்தானுக! இன்னைக்கு கெம்பீரமா தேர்தலை சந்திப்பானுங்களாம்! உஸ்ஸ்ஸப்பா~
SKP Karuna @skpkaruna
விஜயகாந்த் முடிவு இறுதியானதாக நான் கருதவில்லை.-அன்புமணி ராமதாஸ்
இவரு நம்மாளுதாவே! நான் சொல்லலை., காதை உத்துப் பாருங்க., லேசா ஆடும்.
ANGRYஅசோக் @Corp_Tshirt
பேங்குக்கு தன்னி காட்டினா அது விஜய் மல்லையா!
ஜாம்பவான் தலைவர் கலைஞர்க்கு தன்னி காட்டினா அது நம்ம கேப்டன் விஜயகாந்த்!
#தனித்து_போட்டி
முகத்திரை @mugathirai 29m
நேத்து வரைக்கும் பழம், பாலுன்னு பேசுன திமுக அனுதாபிகள். இன்னைலேர்ந்து குடிகாரன், கூத்தாடின்னு ஆரம்பிச்சுட்டாங்க. #இது தாண்டா அரசியல்.
ஆல்தோட்டபூபதி @thoatta
இதுல என்ன கொடுமைன்னா, இப்ப காங்கிரஸ் திமுக’கிட்ட 60 தொகுதி கேட்கும், தட் ‘இது எப்படி இருக்கும்னா, மச்சான் நீ கேளேன்’ மொமன்ட்
உளவாளி @withkaran
கேப்டன நம்பி தேமுதிகவே தனித்து போட்டியிடும்போது திமுக காங்கிரஸ் சனியன கழட்டிவிட்டுட்டு தனியாவே நிக்கலாம்..
****************************************************************************************************************************
ரசனை ஶ்ரீராம் வலைப்பூ பிரபலம், அமெரிக்காவில் வாழ்கிறார். பொதுவான விஷயங்களை சுவைபட எழுதுபவர். விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவரின் முகநூல் ஸ்டேடஸை இங்கு பகரிந்து கொள்கிறேன்.
// Rasanai Sriram
4 hrs ·
நந்தவனத்தில் ஒரு கேப்டன்
++++++++++++++++++++++++++

வேலையில் இருப்பவனுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்று நினைக்கிறீர்கள்? பேப்பர் போடவேண்டுமென நினைக்கும்போது, வாகாய் அடுத்தவேலை கிடைத்துத் தொலையாது. ஜம்ப் செய்ய இயலாது, பல்லை கடித்துக்கொண்டு வண்டியோட்ட வேண்டியிருக்கும்.
கேப்டனுக்கு லட்டாட்டம் சூழ்நிலைகள் அமைகிறது. முன்னர், பாமக-வுக்கு அப்படித்தான் அமையும். மக்களின் மாத்திக்குத்தும் போக்குக்கேற்ப கூட்டணியில் சேர்வார் ராமதாஸ். தேமுதிக 2011ல் தனியாய் நின்றிருந்தால் 29 சீட் என்ன, ஒத்தை சீட்டுகூட ஜெயித்திருக்கவே முடியாது என்பதுதான் நிதர்சனம். இப்போது 59 சீட் வரை திமுக தர முன்வந்ததாகச் சொல்கிறார்கள். இரண்டு கழகங்களுக்கு மாறி மாறி குத்துவதே தமிழகத்தின் டிசைன். இந்தத் தேர்தலில் மு.க.முத்துவே முதல்வர் வேட்பாளராக நின்றாலும் திமுக-வுக்கே வெற்றி. அத்தனை anti-incumbency. மிக எளிதாக 40 எம்மெல்லே தேத்தியிருக்கலாம் கேப்டன். திமுக-வுக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஆட்சியிலேயே பங்கு கேட்டிருக்கலாம். அல்லது ரொம்ப கெட்டிக்காரத்தனமாய் பொட்டி வாங்கிக்கொண்டு இந்த முடிவை எடுத்திருந்தாலும், அதனால் அவர்களின் 10% வாக்குவங்கி பபுள் வெடித்துவிடும் அபாயம்தான். என் கணிப்பில் தேமுதிக-வுக்கு இத்தேர்தலில் 2-3% ஓட்டு மட்டுமே விழுந்து பெப்பரப்பே என, தேமுதிக-வின் பவுசு தெரிந்துவிடும். தொகுதிகள் எண்ணிக்கையில் முட்டை அல்லது அண்ணியார் நின்றால் ஒரு தொகுதி மட்டும் ஜெயிக்கக்கூடும். கேப்டனே இந்தத் தடவை ஜெயிப்பது சந்தேகம்தான்.
இப்பவும் கெட்டுப்போகவில்லையென்றால் திமுக கேம்ப்பில் “கேரண்ட்டி கையெழுத்து கேட்டாக. களுத போட்டுவிட்டு போலாமேன்னு வந்தேன்” என, போய் செட்டிலாவது நல்லது.
நாலாறு மாதமாய் கூட்டணியை வேண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைச்சிட்டீங்களே கேப்டன் ///,”
