ஆஸ்கர் விருதுபெற பார்த்திபனுக்கு ரஜினி வாழ்த்து!

Published On:

| By Balaji

ஒத்த செருப்பு படத்தை நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இந்தப் படம் முழுவதும் பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மே 19) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், நடிகர் கே.பாக்யராஜ், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்துக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது அருமை நண்பர் பார்த்திபன், ஒரு நல்ல வித்தியாசமான படைப்பாளி. நல்ல மனிதர். புதிது புதிதாக சிந்திக்கக்கூடியவர். நிறைய நல்ல படங்களை அவர் கொடுத்திருக்கிறார்.

ADVERTISEMENT

அவர் திடீரென படம் இயக்குவதை விட்டுவிட்டு நடிப்புக்கு வந்தவுடன் எனக்குக் கொஞ்சம் வருத்தம் இருந்தது. இப்படி ஒரு நல்ல படைப்பாளி படம் எடுப்பதை விட்டுவிட்டு நடிக்கிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. அண்மையில் அவரை சந்தித்தபோது அவர் படங்களை இயக்க வேண்டும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். அப்போதுதான் அவர் இந்த ஒத்த செருப்பு படத்தைப் பற்றி கூறினார். இந்தப் படம் மிகவும் வித்தியாசமான முயற்சி. தனி ஒரு நபர் படம் முழுக்க வருவது வித்தியாசமான முயற்சி.

1960களில் யாதீன் என்ற படத்தை சுனில் தத் உருவாக்கினார். அந்தப் படத்தில் அவரை தவிர வேறு யாரும் நடித்திருக்க மாட்டார்கள். அந்தப் படத்துக்கு மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்யப்பட்டது. ஒருவர் மட்டும் நடித்த படமா எனப் பலரும் படத்தைப் பார்க்க சென்றனர். படமும் நன்றாக உருவாக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இந்தியாவில் இரண்டாவது முறையாகவும், தென்னிந்தியாவில் முதன்முறையாகவும் பார்த்திபன் இம்முயற்சியை எடுத்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் அவரே கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். இது உலகிலேயே முதன்முறையாகும். இந்தப் படத்துக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று ஆஸ்கர் விருதுகளுக்காக அனுப்பப்பட்டு விருதை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

.

ADVERTISEMENT

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://minnambalam.com/k/2019/05/19/37)

**

.

**

[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://minnambalam.com/k/2019/05/19/38)

**

.

.

**

[வாக்கு கணிப்பு: பாஜகவுக்கு வெற்றியா?](https://minnambalam.com/k/2019/05/19/50)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://minnambalam.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://minnambalam.com/k/2019/05/18/88)

**

.

.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share