ஆளே இல்லாத டெல்லில யாருக்கு பெல்லு: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

திநகர் சிக்னல்ல ரைட் சைடு திரும்ப இண்டிகேட்டர் போட்டதும், 4 டிஎம்சி தண்ணிகூட தரமுடியாதுன்னு சித்தராமய்யா சொன்னதுக்கு போராட்டம் பண்றாங்க திரும்பாதன்னு ஒருத்தர் சொல்லிட்டு போறார். லெஃப்டு இண்டிகேட்டர் போட்டதும், நீட் தேர்வு வேற மாநிலத்துல வெச்சதுக்கு போராட்டம் பண்றாங்க திரும்பாதன்றாங்க. சரி நேரா போகலாம்னு பாத்தா அங்க ஒரு ஆக்சிடெண்ட். தினம் சாகுறதே வேலையா போச்சு இவனுங்களுக்குன்னு ஒருத்தர் திட்டிட்டுப்போறார். ஆக்சிடண்ட் நடந்தாலே பதறிப்போன மக்கள், செத்துட்டானா இல்லையான்னு விசாரிச்சிட்டு போற அளவுக்கு காலம் மாறிப்போச்சு. அதாவது நீட் தேர்வு கூடாதுன்னு போராடுனவங்களை தமிழ்நாட்டுல எக்சாம் செண்டர் வைக்கலைன்னு போராட வெச்சது தான் அரசியல். ஆனா, இதைவிட பெரிய மேட்டர் ஒன்னு இருக்கு. எப்படியும் மே 3ஆம் தேதி கர்நாடகா தண்ணி, நீட் தேர்வு, வரைவுத் திட்டம்னு சுத்தி சுத்தி அடிப்பாங்கன்னு தெரிஞ்சு, எடப்பாடி டெல்லில போய் உக்காந்திருக்கார். ஆனா, பிரதமர் உட்பட அனைவரும் கர்நாடக தேர்தல்ல இருக்குறதால எதுவும் பண்ண முடியாதுன்னுட்டாங்க. ஆளே இல்லாத கடைல யாருக்கு சார் காலிங் பெல் அடிக்கிறீங்கன்னு ஏர்போர்ட் வரும்போது கேட்டுட்டு வர்றேன். அப்டேட்டைப் படிங்க.

**ஜாக்‌ஷன் துரை**

ஏன்டா குழம்பு வைக்க தெரியலன்னா அறிஞ்சவன் தெரிஞ்சவன் பக்கத்தூட்டு காரன் கிட்ட கேட்டு வைங்கடா…

அதென்ன தோழிக்கு வீடியோ கால் பன்னி டவுட்டு கேக்குறது…

விட்டா வீடியோலயே கிண்டி விட சொல்லுவாய்ங்க போல…

**Boobathi Kalaivanan**

கூட படிச்சவன் கிட்ட இருந்து வாட்ஸ்அப் மெசஞ் வந்தாலே பார்க்கமால் டெலிட் பண்ணிரனும் கல்யாண கார்ட் குடுத்துட்டு உனக்கு எப்ப கல்யாணம்-ன்னு ஆணவத்தில் கேட்குறானுங்க

**Keerthiswasthika Vinoth**

டேய் நாய்களா !

17, 18 வயசு குழந்தைக டா .

Foot ball இல்ல. உங்க இஷ்டத்துக்கு அங்கிட்டும் இங்கிட்டும் உருட்ட

**Aarthi Dhanraj**

Facebook la எனக்கு பொழுதுபோக்கே எல்லார் போஸ்ட்லையும் எந்த எந்த வரி சுஜாதா மாதிரி எழுதி இருக்காங்கன்னு கவனிக்கறதுதான்

**ஹார்டி பார்கவன்**

தமிழ் சினிமாவில் தன்னோட திறமையால மட்டுமே “SHINE” பண்ண ஒரே ஆளுனா அது நம்ம டி.ஆர் மட்டும் தான்..

பின்ன.. கதை,திரைக்கதை,வசனம், ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், எடிட்டிங்,நடிப்பு, இயக்கம்,கிளப் போர்ட் அடிக்குறது , னு 18 டிப்பார்ட்மெண்ட் வேலைய ஒரே ஆள் பாத்துருக்காரு..

**யாழினி**

சரக்கடிக்கறதுக்கு வேனா கூப்டுங்க சமைக்கலாம் கூப்டாதிங்க ஆணாதிக்கவாதிகளே

**வேலை, சமூகம் & அரசியல்**

50MB Data வச்சுக்கிட்டு இணையபோராளி விடுற சவுண்ட கூட

50 MP வச்சிருக்கிற அதிமுக தமிழக நலன்களுக்கு மத்தியஅரசிடம் போராடாததுதான் உச்சகட்ட வேதனை!

**Karthick Papilio**

இதுவரை திரைப்படமாக்க பட்ட சுஜாதாவின் படைப்புக்கள் :

*அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு – திரைப்படம்)

*காயத்ரி

*கரையெல்லாம் செண்பகப்பூ

*ப்ரியா

*விக்ரம்

*வானம் வசப்படும்

*ஆனந்த தாண்டவம்

*சைத்தான்(திரைப்படம்)

**ஹார்டி பார்கவன்**

நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்

இதுக்கு பேசாம உங்களுக்கு எல்லாம் எதுக்குடா டாக்டர் படிப்புனு நேரடியாவே கேளுங்கடா.. மொன்னைகளா..

**Khaja Mohideen**

சரிப்பா.. நாங்க வெளிய போய் பரிட்சை எழுதுறோம்.. ஆனா வெளி மாநில பசங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கல்லூரில இடம் குடுக்க மாட்டோம்.. ஓகே வா..??/

**ஹார்டி பார்கவன்**

சமைக்க கத்துக்க சொன்ன விவேக்க திட்டுன எத்தனை பெண்ணிய பெற்றோர்கள்…

பையனுக்கு சமைக்க தெரிஞ்சா மட்டும் போதும்னு தன் மகளை கட்டிகொடுத்து கண்கலங்காம பாத்துக்குறோம்னு சொல்ற தைரியம் இருக்கு.. அவங்க எல்லாம் ஆபிஸ் ரூம் வாங்க.. சமைக்க தெரிஞ்ச பசங்க உங்க ப்ரொபைல என் இன்பாக்ஸ்க்கு அனுப்ப ரெடி ஆகுங்க.

**ஹரி. ஜெ**

அடிமை: ஸ்டாலின்ன சந்திராசேகர் ராவ் வந்து சந்திக்குறார்… திருமா ராகுல்ல சந்திக்குறார்… நம்ப எடப்பாடிய ஒருத்தன் கூட மதிக்க மாட்றானுங்க..

தம்பி: உங்கள மட்டுமா எங்க அண்ணன் சீமான்ன கூட தான் எவன்னும் மதிக்க மட்டுறானுங்க.

**Raja Prabhu VK**

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி ஓரளவு உறுதியாகிருச்சு

திமுக+மதிமுக

பாஜக+அதிமுக+ரஜினி(கட்சி ஆரம்பித்தால்)

காங்கிரஸ்+அமமுக+விடுதலை சிறுத்தைகள்

கம்யூனிஸ்ட் – திமுக பக்கம் வர வாய்ப்பு இருக்கு

பாமக & தேமுதிக – மதில் மேல் பூனை போல

**ஶ்ரீதேவி**

அம்மா…கடைக்கு போயிட்டு வரேன்…அக்காவோட விளையாடிட்டு சமத்தா இருடா வீட்டில.

Ok..மா..வரும் போது kinderjoy வாங்கிட்டு வரியா??

கடையில் கிண்டர்ஜாய் இல்லன்னா …வேற என்ன வாங்கிட்டு வரனும்ன்னு சொல்லுடா….

ஐந்து நொடிகள் யோசித்தவள்……

அநத் கிண்டர்ஜாய் இல்லன்னா வேற கிண்டர்ஜாய் வாங்கிட்டு வாம்மா…ன்னு ஒரு பதில் ..

குழந்தை மனது

**Karthick Papilio**

மிக சின்ன பேய்கதை ஒன்றை எழுதினார் சுஜாதா.

ஒருவன் ஒருத்தியை பிக்அப் செய்து கொண்டு

ஓட்டல் அறை படுக்கையில் இருந்தான்.

அவன் கேட்டான்

“உனக்கு பேய்கள் மேல் நம்பிக்கை இருக்கிறதா ?

இல்லை என்ற அவள்

கையை நீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டி ஸ்விட்ச்சை அணைத்தாள் !

**நா. சரத்குமார்**

கெடா விருந்து வெளுத்து கட்டலாம்னு பாத்தா டேபிள் மேனஸ்னு சாப்ட்டது போதும் எந்திரின்னு கூட்டிட்டு போயிட்டானுங்க … ப்ளடி எஜிகேடட் ப்பீப்பிள்ஸ்

**Arunkumar Dhanaraj**

பிரதமரை சந்திக்கும் திட்டமில்லை -எடப்பாடி

என்னது திட்டமில்லையா ..அவங்க உங்கள கூப்பிடலைனு சொல்லுங்க..மதிக்கலைன்னு கூட சொல்லலாம்.

**Karl Max Ganapathy**

சரிம்மா… நாங்களே சமைச்சிக்கிறோம். ஆனா இனிமே சிலிண்டர் இல்ல, தண்ணி கேனை தூக்கி அந்த டப்பா மேல கூட கவுக்கமாட்டோம் பாத்துக்க. மல்லேஸ்வரி பொறந்த நாட்ல கட்ட பைய தூக்க கூட கட்னவன்தான் வரனுமா… போர்

ஆமா போர்…

**Sathiya Kumar**

: வணக்கேம் ப்ரேண்ட்ஸ்… இந்த வீடியோல infinity war 2 ல என்ன நடக்கப்போவுது பாக்கப்போறோம்……

: டாய்…. நீதான தேவசேனா கட்டப்பா மவனு பாகுபலி 2க்கு கதை சொன்னவன்….

-லாக் ஆஃப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share