ஆசிய-பசிபிக் நாடுகளில் இந்தியாவில்தான் குறைந்த சம்பளம்!

Published On:

| By Balaji

வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் ஆசிய-பசிபிக் நாடுகளில் உள்ள 5,500 நிறுவனங்களில் மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில்தான் குறைவான ஆண்டுச் சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில், 313 இந்திய நிறுவனங்கள் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவைவிட சீனாவில் 64 முதல் 100 சதவிகிதம் அதிகமாக சம்பளம் தரப்படுகிறது எனவும் தெரியவந்துள்ளது. மருத்துவர், வழக்கறிஞர் போன்ற தொழில்முறைப் பணியாளர்களுக்கு ஆரம்ப நிலையில் 11,000 அமெரிக்க டாலர்கள் ஓர் ஆண்டுக்கு ஊதியமாக இந்தியாவில் வழங்கப்படுகிறது. இது, சீனாவில் வழங்கப்படும் ஊதியத்தில் பாதிகூட இல்லை. ஆரம்பக்கட்ட பணியாளர்களுக்கு 81 சதவிகிதமும், இடைப்பட்ட பணியாளர்களுக்கு 84 சதவிகிதமும், மூத்த நிலை பணியாளர்களுக்கு 64 சதவிகிதமும் இந்தியாவைவிட சீனாவில் அதிகமாக வழங்கப்படுகிறது. மூத்த மற்றும் மேல்மட்ட பதவிகள் வகிக்கும் பணியாளர்களுக்கு சிங்கப்பூரிலும், இடைப்பட்ட நிலையில் பதவிவகிப்போர்களுக்கு ஆஸ்திரேலியாவிலும் மிக அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. திறமை அடிப்படையில் இந்தியா, சீனாவைவிட முன்னிலை வகிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share