கடல் அலை ஓயலாம், வீசும் புயல் தென்றலாக மாறலாம், மாறாத ஒன்று, இணையத்தில் நடக்கும் ரசிக சண்டைகள்தான்!. பரீட்சைக்குக் கூட இப்படி கரைக்டா டைம்டேபிள் போட்டு பொறுப்பா படிச்சிருக்க மாட்டாங்க.. ஞாயித்துக்கிழமை காலை 10 மணிக்கெல்லாம் #aalumadoluma -ன்னு அஜித் பட பாடல் வரி, ட்விட்டரில் ட்ரெண்டாச்சு. என்னாடான்னு பாத்தா அஜித் நடிச்ச வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாட்டு வரி எதுக்குடா ட்ரெண்டாகுதுன்னு பார்த்தா அது, 10 மில்லியன் வ்யூ கிராஸ் ஆகிடுச்சாம். ஏம்மா இதெல்லாம் ஒரு சாதனையாமா? தனுஷ் பாடின ‘வொய் திஸ் கொல வெறி’ பாட்டு கூடத்தான் 100 மில்லியன் க்ராஸ் ஆகிடுச்சு. அவரு ரசிகர்ள்ளாம் பேசாமத்தானே இருக்காங்க, என்னம்மா இப்படி பண்றீங்களேமான்னு கேட்டா, உஸ்…பேசாம இருங்க பாஸ், அங்க பாருங்க விஜய்-யின் ‘தெறி’ டீசர் வெறும் 9.3 மில்லியன் பேர்தான் பார்த்து இருக்காங்க. எங்களுக்கும் அவங்களுக்கும்தான் போட்டி. பேசாம போறீயா வாயில கத்தியவிட்டு சுத்தவா”ன்னு டி.எம்ல கேட்கிறாங்க. வழக்கம்போல இரு தரப்பும் போட்டுக்கொண்ட ட்விட்களில் ஓரளவுக்கு க்ரியேட்டிவ் ட்விட்ஸ் ரெண்டு, மூணு சாம்பிள் போடாலம்ன்னு பார்த்தா எல்லா ட்விட்டும் உஸ்ஸ்ஸ்… சரி, நம்ம அடுத்த மேட்டருக்கு போவோம்!.
இன்னும் எப்படியும் ரெண்டு முணு மாசத்துக்கு ராஜேஷ் லக்கானிதான் ஹீரோ, ட்ரோலிங் மெட்டீரியல்ன்னு நேத்தே தெரிஞ்சு போச்சு. “தமிழகம் முழுவதும் உள்ள மொபைல்கள் கண்காணிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்களைக் கிண்டல் செய்தால் சட்டம் பாயும். நீங்க வாட்ஸ் அப் குரூப்களில்கூட விமர்சனம் செய்தால் சிறைத் தண்டனை ” என, ராஜேஷ் லக்கானி தெரிவித்ததாக யாரோ கெளப்பிவிட, 4ஜியைவிட ஸ்பீடாகப் பரவியது அந்த தகவல்… “இருக்கிற ஒரே எண்டர்டெயின்மென்ட்டை கெடுக்கிறீங்களே” ன்னு நெட்டிசன்கள் ஷோல்டரை தூக்கிக்கொண்டு திரிந்தார்கள். கடைசியாக, அந்தத் தகவல் தமிழக தேர்தல் கமிஷனுருக்கே போய் “நான் அப்படியெல்லாம் சொல்லவேயில்லை, நான் சொன்னது புகாரளிக்க வாட்ஸ் அப் எண் வழங்கப்படும் என்றுதான்” என்று, அவரே சொன்னபின் அவரையும் கலாய்த்து ரெண்டு ட்விட்டும் நாலு ஃபேஸ்புக் ஸ்டேடஸும் போட்டு நிம்மதியடைந்தார்கள்.
//சி.பி.செந்தில்குமார் @senthilcp
சமூக வலைதளங்களில் தவறாக பிரச்சாரம் செய்தால் சிறை தண்டனை:ராஜேஷ் லக்கானி # மேடை ஏறி பொய்யா பிரச்சாரம் பண்ணினா பதவி! நல்லாருக்குய்யாநியாயம்//
//சிந்தனைவாதி @PARITHITAMIL
அரசியல் தலைவர்களை வலைத்தளங்களில் அவதூறு பரப்பினால் சிறை- லக்கானி
#மரியாதைக்குரிய ஊழல்வாதிகளே!…ன்னு சொல்லலாமா? //
//நிலாத்தோழி® @archanabaluit
சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தால் ஒருமாதம் சிறை- தேர்தல் ஆணையம்
#உள்ளபோனாலும் ட்வீட் போடுவம்ல. அவ்வ்//
-லாக் ஆஃப்,”
