குரூப் தேர்வுகளுக்கான தேதியைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று (ஏப்ரல் 24) வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் நடத்தப்படும் தேர்வு அட்டவணையைக் கடந்த ஆண்டே டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.
இந்நிலையில் அதுதொடர்பாக இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணை 20.12.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தற்பொழுது தேர்வர்களின் நலன் கருதியும், தெரிவின் முறைகளை விரைந்து செயல்படுத்தவும், தொழில்நுட்ப பதவிகளுக்காக நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளை ஒருங்கிணைத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIA-ல் அடங்கிய பதவிகளுக்கான தேர்வுத்திட்டத்தை மாற்றியமைத்தும், 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வுகால அட்டவணை திருத்தியமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
90 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி,
29 பணியிடங்களுக்கான குரூப் 1-பி மற்றும் குரூப்-1-சி முதல் நிலைத் தேர்வு ஜூலை 12ஆம் தேதி,
105 பணியிடங்களுக்கான நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் தேர்வு மே 15ஆம் தேதி,
2030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு ஜூன் 28ஆம் தேதி,
605 பணியிடங்களுக்கான நேர்காணல் அல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் தேர்வு ஜூலை 26ஆம் தேதி,
உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 14ஆம் தேதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சமூக நீதிக்கு ரோல் மாடல் தமிழ்நாடு: ஸ்டாலின் பெருமிதம்!
ஒயின் கோப்பை ஏந்திய ரக்ஷிதாவின் ஒய்யாரம்! ரசிக்க வைக்கும் பெண்ணுரிமை மெசேஜ்!