இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாங்கும் கடனின் அளவு ஜூலை மாதத்தில் 74 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
2017ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் 1.89 பில்லியன் டாலர் கடன் பெற்றிருந்தன. ஆனால் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் 2.18 பில்லியன் டாலரை நிறுவனங்கள் கடனாகப் பெற்றுள்ளன. இது 74 சதவிகிதம் அதிகமாகும். பெறப்பட்ட மொத்தக் கடன் தொகையில் 1.75 பில்லியன் டாலர் அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்கூட்டிய ஒப்புதல்கள் இல்லாமல் (ஆட்டோமேட்டிக் ரூட்) பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை ஒப்புதல்கள் வாயிலாகப் பெறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்புதல் வாயிலாக 1 பில்லியன் டாலரைக் கடனாகப் பெற்றுள்ளது.
ஆட்டோமேட்டிக் ரூட் வழியாக அதிகபட்சமாக, *தேவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் கார்பரேசன்* நிறுவனம் 240 மில்லியன் டாலரைக் கடனாகப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து *ஜேஎஸ்டபிள்யூ* ஸ்டீல் நிறுவனம் 165 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளது. 121 மில்லியன் டாலரை *ஜி.இ. டீசல் லோகோமோட்டிவ்* நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் ரூபாய் சார்ந்த பத்திரங்கள் (RDB) வாயிலாக எவ்விதக் கடனும் பெறப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
