உடுமலைப்பேட்டையில் நடந்த சாதி ஆணவக்கொலையின் காரணமாக, நான்கைந்து நாளாக சமூக ஊடக அடுப்பில் வச்ச வெந்நீர்ப் பானையைப்போல கொதித்துக்கொண்டே இருக்கிறது. சாதி ஆதரவாளர்களும் தங்கள் பங்குக்கு கொலையை (!) ஆதரித்து ட்விட்டரிலும், முகநூலிலும் பெருமையாக கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் ஒரு இணையதளம், தமிழ்ப் பெண் படைப்பாளிகள் மற்றும் ஊடகத்துறையிலிருக்கும் பெண்களிடம், சாதிக்கு எதிராக உங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துகொள்ளலாமா? எனக் கேட்கவும், அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். பின்னர் அவர்களின், சாதிக்கு எதிரான கருத்தும் பதியவைக்கப்பட்டது. எதையுமே விமர்சனநோக்கில் பார்க்கும் நெட்டிசன்கள் நான் உயர்சாதிப் பெண் ஆனால், ஆணவக்கொலையை எதிர்க்கிறேன்” என்ற, அந்தச் சாதி எதிர்ப்பு வாசகங்களுக்கு எதிராக பொங்கித் தீர்த்தனர். அதென்னா “நான் உயர்சாதி” என்ற பெருமை என டென்சனானார்கள். பெண் படைப்பாளிகள் இதற்கு விளக்கம் கொடுத்தாலும் “ம்ம்கூம், வார்டன்னா அடிப்போம்” என்பது மாதிரி அவர்களைக் கலாய்த்தும், கண்டித்தும் ட்விட்களை அடித்துத் தள்ளினர். அதில சில ட்விட்களும், பெண் படைப்பாளிகளுக்கு ஆதரவாக மதுரை உயர்நீதிமன்ற வக்கீல் திரு.பிரபு ராஜதுரை எழுதியுள்ள நிலைத்தகவலும் கீழே.
// @MrPeruvalam
தாம் ஒரு உயர்சாதின்னு சொல்லும்போதே மற்றவரை உளவியல்ரீதியில் தாழ்ந்த சாதின்னு தாக்குதலுக்கு உட்படுத்தும் ஆதிக்க மனோபாவம்தான் . //
// @altappu
அந்த போட்டோ எல்லாம் பாத்துட்டு என்னங்க எல்லா உயர்சாதி பொண்ணுகளும் இவ்ளோ அட்டுபிகரா இருக்காங்கனு ஒருத்தர் விசனப்பட்டார் //
// @altappu
அந்த போட்டோ எல்லாம் பாத்துட்டு என்னங்க எல்லா உயர்சாதி பொண்ணுகளும் இவ்ளோ அட்டுபிகரா இருக்காங்கன்னு ஒருத்தர் விசனப்பட்டார் //
// @pasanvi1986
நான் உயர்சாதிப் பெண் ; ஆணவக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
அடுத்தவாட்டி ஆணவமில்லாமல் கொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன் //
// @shanth_twits
அதென்ன நான் உயர்சாதி, ஆதிக்கசாதி, ஆணவக் கொலையை எதிர்க்கிறேன்.. முதல்ல சாதிய எதிர்க்கறேன்னு சொல்லவேண்டியதுதான. அப்புறம் ஏன் கொலை நடக்கப் போகுது//
// @David_EXIM
ஒரு பேச்சுக்குக் கூட ‘உயர்சாதிப் பெண்’ ன்றத எடுத்துட்டு போடுங்க ன்னு சொல்லல. ஏன்னா அவங்களுக்கு அது தப்பாவே தெரியல.//
*******************************************************************************************************************************************************************************************
Prabhu Rajadurai added 2 new photos.
1 hr ·
இருபது வருடங்களுக்குமுன்னர், ராமர்பிள்ளை என்ற கல்லூரி படிப்பைக்கூட படிக்காத இளைஞர் ஒருவர் ‘மூலிகையிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும்’ என்று சென்னை ஐஐடி ஆசிரியர்கள் பலரை எளிய வித்தை ஒன்றின் மூலம் ஏமாற்றி பெருத்த தர்மசங்கடத்திற்குள்ளாக்கினார்.
தற்பொழுது ஆவணக் கொலைகளுக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரில், கொஞ்சமும் நேயமற்ற (insensitive) வகையில் உருவாக்கப்பட்ட பிரச்சார வடிவம் ஒன்றில் அது ‘என்னவென்று அறியாமலேயே’ தங்களை இணைத்துக் கொண்டதன்மூலம் முற்போக்கு எண்ணம்கொண்ட பெண் ஊடகவியலார்கள் பலர் மிகுந்த தர்மசங்கடத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதில், ராமர்பிள்ளைகூட தவறான உதாரணம்தான். ஏனெனில் அந்தப் பிரச்சார வடிவத்தை உருவாக்கியவர்களும் சரி, அறிந்தோ அறியாமலோ பங்கு கொண்டவர்களும் சரி, தவறான எண்ணமோ, ஆணவப்போக்கோ கொஞ்சமும் இருக்க வாய்ப்பில்லை.
ஆயினும் அவர்கள் கடந்த காலத்தில் வெளிப்படுத்தியுள்ள கருத்தாக்கங்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமலும், நடந்தது என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என்ற மனப்பான்மை ஏதுமின்றியும் ‘மாட்னாங்கடா வசமா’ என்று வழக்கம்போல தர்மஅடி கும்பல்கள் கிளம்பவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மன உளைச்சலும் சோர்வும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல, கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து அவர்கள் காவலர்களைக் கடிந்துகொண்டு ‘நீதிமன்ற அவமதிப்பிற்காக’ விசாரிக்க முனைந்த செயலையும், எவ்விதமான புரிதலுமும் இன்றி அவரது சாதியையும் இழுத்துவைத்து ‘வன்மத்’தோடு தாக்கப்படுவதும் மிகவும் வருந்தத்தக்கது. இக்கூட்டத்தில் பொதுவுடமை கட்சி சார்ந்த முற்போக்கு எழுத்தாளர் ஒருவரையும் பார்த்தேன்.
புகைப்படங்களை ஊடகங்களில் பார்த்ததும், நீதிபதிக்கு தோன்றிய அதேஎண்ணம் எனக்கும் தோன்றியது. குற்றத்தை நேரில்பார்த்த முக்கியமான சாட்சி கெளசல்யா. குற்றம் செய்தவர்களை அதற்குமுன்னர் அறிந்திராதவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில், கைது செய்யப்படுபவர்களின் முகங்கள் ஏன் துணி போட்டு மூடப்படுகின்றன என்பதைப் பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். நீதிபதி நாகமுத்து அவர்களும் இதுகுறித்து முக்கியமான தீர்ப்பு ஒன்று கூறி அந்தத் தீர்ப்பு காவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆணவக்கொலை புரிந்த ‘குற்றவாளிகளுக்கு எதிரான முக்கியமான சாட்சி பலவீனப்படுத்தப்படுகிறது’ என்ற ஆதங்கத்தில் நீதிபதி காவலர்களைக் கண்டிப்பதை, சாதிப்பற்றாக திரிப்பதும், ஆணவக்கொலைக்கு எதிராக தவறான புரிதலுடன் ஆனால் நல்லெண்ணத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சாரத்தில் தங்களையறியாமல் இணைத்துக்கொண்ட ஆர்வலர்களை துரத்துவதும் ஆவணக்கொலைகளுக்கு எதிரான வலுவான பொதுக்கருத்தை உருவாக்குவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
இலக்கு ஒன்றாக இருக்கையில் சகபயணிகளுக்கிடையேயான புரிந்துணர்வு மட்டுமே அனைவரையும் அங்கு கொண்டு சேர்க்குமேயல்லாமல், சந்தேகங்களல்ல…,”
