மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 நவ 2018

அமைச்சரின் மனு தள்ளுபடி!

அமைச்சரின் மனு தள்ளுபடி!

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் மாபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாபா பாண்டியராஜனும், திமுக சார்பில் ஆவடி நாசரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மாபா பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தன் மனுவில், “தேர்தலில் முறைகேடு செய்தும், தேர்தல் அதிகாரிகளின் துணையோடும் மாபா பாண்டியராஜன் இந்த வெற்றியை பெற்றிருக்கிறார். எனவே அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என மாபா பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி முரளிதரன் முன்பு இன்று (நவம்பர் 9) விசாரணைக்கு வந்த போது, பாண்டியராஜன் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தல் வழக்கை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் பிரதான வழக்கின் விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon