மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 நவ 2018

துருவ நட்சத்திரம்: ஹாரிஸ் முக்கிய தகவல்!

துருவ நட்சத்திரம்: ஹாரிஸ் முக்கிய தகவல்!

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். ஸ்பை த்ரில்லராகத் தயாராகியுள்ள இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் இம்மாதம் வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

சாமி ஸ்கொயர் திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் துருவநட்சத்திரம், கடாரம் கொண்டான். இதில் கௌதம் மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் துருவ நட்சத்திரம் படம் குறித்து ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார் படத்துக்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஹாரிஸ் ஜெயராஜ், அவர் இசையமைத்துள்ள தேவ் திரைப்படத்துக்குப் பிறகு துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ‘ஒரு மனம்...’ என்ற சிங்கிள் டிராக் வெளியாகும் எனப் பதிவிட்டுள்ளார்.

துருவ நட்சத்திரம் திரைப்படம் கௌதம் மற்றும் விக்ரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், வம்சி கிருஷ்ணா, ஷ்ரவந்தி சாய்நாத், திவ்ய தர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

வெள்ளி, 9 நவ 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon