மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு!

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு!

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.பின்னர் எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அன்று மாலையே விடுவித்தது.

இந்த நிலையில் நக்கீரன் பொறுப்பாசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என அஞ்சுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த மனு நாளை நீதிபதி தண்டபாணி முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon