மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 11 அக் 2018

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்ற வீரர்!

துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்ற வீரர்!

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் செளராப் சவுதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

அர்ஜெண்டினாவின் பியோனஸ் ஏர்ஸ் நகரில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக்கில் அக்டோபர் 10ஆம் தேதி நடந்த போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவின் செளராப் சவுதரி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 244.2 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை செளரப் வென்றுள்ளார். இவருக்கு அடுத்து 236.7 புள்ளிகளைப் பெற்று தென்கொரிய வீரர் சங் யுங்கோ வெள்ளிப் பதக்கத்தையும், 215.6 புள்ளிகள் பெற்று சுவிட்சர்லாந்து வீரர் சொலாரி ஜேசன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.

இதனோடு சேர்த்து இந்தியா இந்தத் தொடரில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. அக்டோபர் 8ஆம் தேதி தேதி நடந்த பளு தூக்கும் போட்டியில், ஜெர்மி லால்ரினுங்கா தங்கப்பதக்கம் வென்றார். 9ஆம் தேதி நடந்த பெண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இளம் வீராங்கனை மானு பாகெர் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். 16 வயதான செளராப் சவுதரி மீரட்டுக்கு அருகே உள்ள கலீனா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு சீனியர் ஆசிய சாம்பியன் மற்றும் இளையோர் உலக சாம்பியன் ஆகிய இரண்டு தொடர்களிலும் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 11 அக் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon