மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்?

துப்பாக்கிச் சூடு: ஆட்சியர் எங்கு சென்றார்?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எங்கு சென்றார் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமைச் செயலாளர் மற்றும் உள் துறைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச் சூடு தொடர்பாக 15 வழக்குகளை ஒன்றாகச் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 11) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 99 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, துப்பாக்கிச் சூட்டில் என்ன வகையான துப்பாக்கிகள் உபயோகப்படுத்தப்பட்டன, துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றபோது ஆட்சியர் ஊரில் இல்லாமல் எங்கு சென்றார் என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon