மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தொழில் செய்ய ஏற்ற மாநிலம்: தமிழகத்தின் நிலை?

தொழில் செய்ய ஏற்ற மாநிலம்: தமிழகத்தின் நிலை?

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்களுக்கான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் தமிழகம் முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை.

தொழில் தொடங்குவதற்கு மாநில அரசுகள் மேற்கொண்ட தொழில் சீர்திருத்தங்கள் அடிப்படையில் தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உலக வங்கி மற்றும் தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை சார்பிலான வருடாந்திர பட்டியல் நேற்று (ஜூலை 10) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி ஆந்திரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானா பிடித்துள்ளது.

ஹரியானா, ஜார்க்கண்ட், குஜராத், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. கடந்த ஆண்டும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடத்தில் இருந்தன. கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த குஜராத் இம்முறை ஐந்தாவது இடத்துக்குப் பின் தங்கியுள்ளது.

தமிழகம் இந்தப் பட்டியலில் 15ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 18ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு மூன்று இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்தைத் தமிழகம் பிடித்துள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon