மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

ரேஸ் 3: வெளியீட்டுக்கு முன் லாபம்!

ரேஸ் 3: வெளியீட்டுக்கு முன் லாபம்!

சல்மான் கான் நடிப்பில் நாளை (ஜூன் 15) வெளியாகவுள்ள ரேஸ் 3 திரைப்படம், வெளியாவதற்கு முன்பே படத்திற்குச் செலவழித்ததைவிட அதிக தொகையை வருமானமாகப் பெற்றுள்ளது.

ரேஸ் வகை திரைப்படங்களில் ஏற்கெனவே வெளியான இரு படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் சல்மான் கான் நடிக்கும் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று 130 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. பாலிவுட் படங்களில் அதிக விலைக்கு சேட்டிலைட் உரிமை விற்கப்பட்ட படம் என்ற பெருமையை ரேஸ் 3 பெற்றுள்ளது. இதற்கு முன் ஆமிர் கான் நடித்த தங்கல் திரைப்படமே முதலிடத்தில் இருந்தது.

ரெமோ டி சூஸா இயக்கத்தில் சல்மான் கான், அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சாஹிப் சலீம், டெய்சி ஷா இணைந்து நடித்துள்ளனர். அபுதாபி, தாய்லாந்து, மும்பை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

சல்மான் கான் பிலிம்ஸ், ரமேஷ் தௌரனியின் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. முதன்முறையாக சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் விநியோகப் பணிகளையும் பார்க்க உள்ளது. சல்மான் கானின் தந்தையான சலீம் கான் அதில் கவனம் செலுத்துகிறார். தாய் சல்மா கான் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.

சல்மான் கான் நடிப்பில் இதற்கு முன் வெளியான ‘டைகர் ஜிந்தா ஹை’ திரைப்படமும் வசூலில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon