மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 13 ஜுன் 2018

சிரியா: தொடரும் உயிரிழப்புகள்!

சிரியா: தொடரும் உயிரிழப்புகள்!

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் அரசுப் படையினர் நேற்று (ஜூன்12) நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹசாகே மாகாணத்தில் அமெரிக்கா தலைமையிலான படையினர் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 10 பொதுமக்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இட்லிப் மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களைக் குறிவைத்துக் கடந்த 11ஆம் தேதி சிரியா அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு இளம்பெண் உள்பட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதற்கு முன்பாக, கடந்த 8ஆம் தேதி இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர்.

சிரியா அரசுப் படைகளின் இந்த வான்வழி தாக்குதல் தொடர்பாக ஐ.நா., பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இட்லிப் மாகாணம் போர் நிறுத்தப் பகுதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு உறுதி அளித்தவர்கள், தங்கள் பொறுப்புடமையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 13 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon