மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

சிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை!

சிறைத் தண்டனை குறித்து வருந்தவில்லை!

மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தவுடன் அவரது ரசிகர்களைவிட அதிக வருத்தம் அடைந்தது தயாரிப்பாளர்கள்தான். அவரைக் கதாநாயகனாகக் கொண்டு படத்தின் வேலைகளைத் தொடங்கியிருந்த தயாரிப்பாளர்களுக்கு அந்தச் செய்தி கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் சல்மான் கான் தான் அது குறித்து வருத்தப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ரேஸ் 3 படத்தின் வெளியீட்டை பாலிவுட் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மே 15) மும்பையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய சல்மான் கான், “ரேஸ் 3 படத்தின் கதையை ரமேஷ் தௌரனி இரு வருடங்களுக்கு முன் என்னிடம் கூறியபோது நான் இந்தக் கதைக்குப் பொருந்த மாட்டேன்; சில மாற்றங்களைச் செய்யுங்கள் எனக் கூறினேன். மாற்றங்கள் செய்த பின் சுவாரஸ்யம் நிறைந்த திரைக்கதையாக உருவாகியுள்ளதை உணர்ந்தேன்” எனக் கூறினார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது படங்கள் பாதியிலேயே நிற்பதை நினைத்து கவலைப்பட்டீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “நான் எப்போதும் உள்ளேயே இருந்துவிடுவேன் என நினைத்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். எதிர்மறையான கேள்விகள் வர, “நன்றி. நான் சிறைத் தண்டனை குறித்து வருத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ரெமோ டி சோஸா இயக்கத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சாஹிப் சலீம், டெய்சி ஷா இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon