மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 மே 2018

சுதீப் படத்தில் அறிமுகமாகும் இந்தி நடிகை!

சுதீப் படத்தில் அறிமுகமாகும் இந்தி நடிகை!

கன்னட நடிகர் சுதீப் நடிக்கும் பயில்வான் படத்தின் மூலமாக இந்தி தொலைக்காட்சிகளில் வலம்வந்த ஆக்ன்க்ஷா சிங் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப் நடித்த ஹெபுலி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து பயில்வான் என்ற புதிய படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றது. ஆனால், கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்த நிலையில் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ஆக்ன்க்ஷா சிங் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

சுதீப் குத்துச்சண்டை வீரராக நடிக்கும் இந்தப் படத்தில் சுனில் ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் தொடங்கவுள்ளது. படத்துக்காகப் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சுதீப் ஜூன் மாத இறுதியிலோ அல்லது ஜூலை மாத தொடக்கத்திலோ படப்பிடிப்பில் இணைவார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

சுதீப் தமிழில் ராம் கோபால் வர்மா இயக்கிய ரத்த சரித்திரம் மூலம் அறிமுகமானார். ராஜமெளலி இயக்கத்தில் இவர் வில்லன் வேடம் ஏற்று நடித்த நான் ஈ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதன், 16 மே 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon