மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

இயக்குநரை இயக்கும் இயக்குநர்!

இயக்குநரை இயக்கும் இயக்குநர்!

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடிப்பில் உருவாகிவரும் கண்ணே கலைமானே படத்தின் பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் சீனு ராமசாமி தனது அடுத்தபடத்திற்கும் தமன்னாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார். கண்ணே கலைமானே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதியில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் டீசர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது அடுத்த படத்தில் சமுத்திரகனி நடிக்கவுள்ளதாக சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். சமுத்திரகனி பார்த்திபன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று உறுதியாக அவர் கூறவில்லை. படத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon