மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 15 ஏப் 2018

சொத்து விவரம்: சம்பளம் கட்!

சொத்து விவரம்: சம்பளம் கட்!

ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் சொத்து கணக்கை தாக்கல் செய்யாத மாநில அரசுஅதிகாரிகளுக்கான சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு குஜராத்தின் தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குஜராத் மாநில அரசில் வகுப்பு 1 மற்றும் 2 நிலையில் இருக்கும் அதிகாரிகள் தங்கள் 2017-18ஆம் ஆண்டுக்கான சொத்து விவரத்தைக் கடந்த 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநில அரசு கெடு விதித்து இருந்தது. அதன்படி மொத்தமுள்ள சுமார் 12 ஆயிரம் அதிகாரிகளில் சுமார் 3 ஆயிரம் பேர் இன்னும் மேற்படி கணக்கை தாக்கல் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "முதல் கட்டமாக இந்த அதிகாரிகளுக்கான இந்த மாத (ஏப்ரல்) சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். இதையும் மீறி தாக்கல் செய்யாதவர்களுக்கு அவர்களின் பயிற்சி மற்றும் பதவி உயர்வில் சிக்கல் ஏற்படக்கூடும். இது தொடர்பாக தற்போது மாநில நிதித்துறைக்கு, பொது நிர்வாகத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

தற்போது இந்த அறிவிப்பிற்கு பிறகு அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் சொத்து கணக்கைத் தாக்கல் செய்வார்கள் என்று நம்புகிறோம். அவ்வாறு தாக்கல் செய்வோருக்குச் சம்பளம் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று கூறினார்.

ஞாயிறு, 15 ஏப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon