மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 மா 2018

ஹன்ஷிகா மீது மோசடிப் புகார்!

ஹன்ஷிகா மீது மோசடிப் புகார்!

நடிகை ஹன்சிகா மீது அவருடைய மேனேஜர் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானவர் ஹன்சிகா. விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா, உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த் என தமிழின் முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பெரும்பாலானோருடன் ஜோடியாக நடித்துவிட்டார்.

மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’ மற்றும் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் தற்போது நடித்துவருகிறார் ஹன்சிகா. இவற்றின் படப்பிடிப்பு முடிவடையும் தறுவாயில் உள்ளது. சமீபத்தில் கருப்பு உடையில் ஹன்ஷிகா உடல் எடை குறைத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தின.

இந்த நிலையில், அவரிடம் மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “இதுவரை நான் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை. அதைப் பெற்றுத்தர வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முனுசாமி.

செவ்வாய், 13 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon