மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 பிப் 2018

காதலர்களை ஈர்த்த ‘கூட்டிப் போ கூடவே’!

காதலர்களை ஈர்த்த ‘கூட்டிப் போ கூடவே’!

விஜய் சேதுபதி, சாயீஷா ஜோடி சேர்ந்திருக்கும் ஜுங்கா படத்தில் இடம்பெறும் ‘கூட்டிப் போ கூடவே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ஒரு லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றிருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் கோகுல், இந்தப் படத்தில் விஜய் சேதுபதியை ஸ்டைலிஷான லுக்கில் காட்டவிருக்கிறார். படப்பிடிப்பின்போது வெளியான புகைப்படங்களும் சரி; காதலர் தின ஸ்பெஷலாக வெளிவந்திருக்கும் ‘கூட்டிப் போ கூடவே’ பாடலில் இடம்பெறும் காட்சிகளிலும் சரி, விஜய் சேதுபதியின் தோற்றம் ரசிகர்களைக் கவரும்வண்ணம் இருக்கிறது.

சித்தார்த் விபின் இசையில் லலிதானந்த் வரிகளில் உருவாகியிருக்கும் இந்த மெலடி டூயட் பாடலை ரனினா ரெட்டி, சத்ய ப்ரகாஷ் இருவரும் பாடியிருக்கிறார்கள். ‘நீ யாரோ... யாரோ... நின்றாய் யாதுமாய்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலில்,

அண்மையில் நீ பார்த்து நிற்கின்ற நேரம்

மென்மையாய் கை கோர்த்து போகவே

மெதுவாய் மேல் நாட்டு மேகம் எங்கும்

நகரா நாள் வேண்டுமே வேண்டுமே

என சத்ய பிரகாஷ் குரலில் ஒலிக்கும் வரிகளுக்குப் பின்னர்,

ஆகாயம் தாண்டியும் கூட்டிப் போ கூடவே

ஆளில்லா தீவுகள் கூட்டிப் போ கூடவே

காணாத வேரிடம் கூட்டிப் போ கூடவே

வாழாத ஓரிடம் கூட்டிப் போ கூடவே

என ரனினா குரலில் திரும்பத் திரும்ப ஒலிக்கும் இந்த வரிகளுக்காகவே மீண்டும் மீண்டும் இந்தப் பாடலைக் கேட்கத் தூண்டுகிறது. காதலர் தினத்தன்று வெளியாகியிருக்கும் இந்த மெலடி ரகப் பாடல் இசையால் காதலர் தேசத்திற்கே கூட்டிச் செல்கிறது. இந்தப் பாடல் வெளியாகி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

கூட்டிப் போ கூடவே லிரிக்கல் வீடியோ

புதன், 14 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon