மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 13 பிப் 2018

ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம் பிரபு

ஆக்‌ஷன் த்ரில்லரில் விக்ரம் பிரபு

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவரும் நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்ட விக்ரம் பிரபுவின் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விக்ரம் பிரபு-நிக்கி கல்ராணி ஜோடி நடித்திருக்கும் ‘பக்கா’ திரைப்படம் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. பக்கா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பிஸியாகியிருக்கிறார் விக்ரம் பிரபு. அடுத்ததாக அவர் ‘துப்பாகி முனை’ படப்பிடிப்பிலும் பரபரப்பாக நடித்துவருகிறார். இதனையடுத்து அவர் புதிய படம் ஒன்றில் முழுக்க ஆக்‌ஷனில் மிரட்ட உள்ளார்.

‘அசுரகுரு’ என்ற பெயரில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தை ‘அஞ்சனவித்தை’ குறும்படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் அ.ராஜ்தீப் இயக்குகிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியிலான இந்தப் படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

‘ஜே.எஸ்.பி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ராம்லிங்கம் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான கதாநாயகி தேர்வு நடந்துவருகிறது. இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் பிப்ரவரி 15ஆம் தேதி படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon